இஷான் கிஷன்: அதிக விலைக்கு ஏலம் போனது விளையாடததுத்துக்கு காரணமா ?

ஐபிஎல்  2022இல் அதிக விலைக்கு ஏலம் போனது விளையாட்டை பாதித்தாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் இஷான் கிஷன் கூறினார். 
இஷான் கிஷன்
இஷான் கிஷன்

ஐபிஎல்  2022இல் அதிக விலைக்கு ஏலம் போனது விளையாட்டை பாதித்தாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் இஷான் கிஷன் கூறினார். 

15.25 கோடி கொடுத்து மும்பை அணி இஷான் கிஷனை ஏலத்தில் எடுத்து. மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில இருக்கிறது. அவரது இந்தாண்டில் 11 மேட்ச்சுகளில் 321 ரன்களை எடுத்திருக்கிறார்.

"உண்மையில் அதிக விலைக்கு போனது ஆரம்பத்தில் அழுத்தத்தை கொடுத்துதது. ஆனால் இந்த மாதிரி விளையாட்டுகளில் இதையெல்லாம் புரிந்து தான் ஆட வேண்டும். மேலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருக்கும்போது அவர்களின் அறிவுரை 2-3 நாட்களிலே அந்த பயத்தைப் போக்கியது. ரோகித் சர்மா, விராட் இருவருமே எனக்கு இந்த விசயத்தில் அறிவுரை கூறினார்கள்" என இஷான் தெரிவித்தார். 

மே 12ஆம் தேதி சென்னை அணியுடன் மும்பை விளையாட உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com