டிஆர்எஸ் இல்லாதது ஏன்? அடுத்தடுத்து ஆட்டமிழக்கும் சிஎஸ்கே வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தற்காலிகமாக டிஆர்எஸ் இல்லை என அறிவிக்கப்பட்டைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.
படம்: ட்விட்டர் | ஐபிஎல்
படம்: ட்விட்டர் | ஐபிஎல்


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தற்காலிகமாக டிஆர்எஸ் இல்லை என அறிவிக்கப்பட்டைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.

ஐபிஎல் போட்டியின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

மைதானத்தில் மின்வெட்டு காரணமாக டாஸ் போடும் நேரத்திலேயே சற்று தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆட்டம் தொடங்கியது. சென்னை தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே களமிறங்கினர். டேனியல் சாம்ஸ் வீசிய முதல் பந்தில் ருதுராஜ் ரன் எடுக்க, 2-வது பந்தை கான்வே எதிர்கொண்டார். பந்து கான்வே காலில் பட நடுவரிடம் மும்பை வீரர்கள் அவுட் கேட்டு முறையிட்டனர். நடுவரும் அவுட் கொடுத்தார்.

ஆனால், கான்வே ரிவியூ கேட்க முற்பட்டார். ஆனால், மைதானத்தில் மின்வெட்டு காரணமாக டிஆர்எஸ் தொழில்நுட்பம் தற்காலிகமாக செயல்படாது என நடுவர்கள் தெரிவிக்க, கான்வே களத்திலிருந்து வெளியேறினார். அதே ஓவரில் மொயீன் அலியும் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆனார்.

ஜாஸ்பிரித் பும்ரா தனது முதல் ஓவரிலேயே ராபின் உத்தப்பாவைத் திணறடித்தார். முதல் மூன்று பந்துகளை எதிர்கொள்ள முடியாத உத்தப்பா, 4-வது பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். இந்த நேரத்திலும் டிஆர்எஸ் இல்லை.

இதன்பிறகு, டிஆர்எஸ் தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், கான்வே விக்கெட் பந்து ஸ்டம்புகளை தகர்க்கவில்லை என்பது தெரிவதால், டிஆர்எஸ் விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

டேனியல் சாம்ஸ் தனது மூன்றாவது ஓவரில் ருதுராஜ் (7) விக்கெட்டையும் வீழ்த்தி சிறப்பான தொடக்கத்தைத் தந்தார். பவர் பிளேவின் கடைசி ஓவரில் அம்பதி ராயுடு சிறப்பான முறையில் பவுண்டரி அடித்தாலும், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இதனால், பவர் பிளே முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ஷிவம் துபே உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com