ஒரு ஐபிஎல் பருவத்தில் அதிக ரன்கள் எடுத்த இளம் வீரர் யார்?

ஒரு பருவத்தில் 20 வயதுக்குள் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் திலக் வர்மா முதலிடத்தில் உள்ளார்.
ஒரு ஐபிஎல் பருவத்தில் அதிக ரன்கள் எடுத்த இளம் வீரர் யார்?


ஐபிஎல் போட்டியில் ஒரு பருவத்தில் 20 வயதுக்குள் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் திலக் வர்மா முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த திலக் வர்மாவை ரூ. 1.70 கோடிக்கு மும்பை தேர்வு செய்தது. ஏலத்தில் திலக் வர்மாவைத் தேர்வு செய்ய மும்பையுடன் சென்னையும் போட்டியிட்டு ரூ. 1.50 கோடி வரை சென்றது. எனினும் இறுதியில் திலக் வர்மாவை மும்பையே தேர்வு செய்தது. 

மும்பை அணியில் விளையாட வாய்ப்பு பெற்றதோடு அணியைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சரிவிலிருந்து காப்பாற்றியுள்ளார் 19 வயது திலக் வர்மா. இந்த வருட ஐபிஎல் போட்டியில் 12 இன்னிங்ஸில் 386 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 132.85. ஐபிஎல் போட்டியில் 20 வயதுக்குள் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்பு ரிஷப் பந்த், 2017-ல் 366 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் தான் வருங்காலத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக திலக் வர்மா விளையாடுவார் என ரோஹித் சர்மா பாராட்டியிருந்தார். 
 
ஐபிஎல்: ஒரு பருவத்தில் அதிக ரன்கள் எடுத்த 20 வயதுக்குட்பட்ட வீரர்கள்

368* - திலக் வர்மா (2022)
366 - ரிஷப் பந்த் (2017)
353 - பிருத்வி ஷா (2019)
339 - சஞ்சு சாம்சன் (2014)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com