பரிசோதனை முயற்சியில் மும்பை, ஹைதராபாத்: ரோஹித் பந்துவீச்சு தேர்வு
By DIN | Published On : 17th May 2022 07:16 PM | Last Updated : 17th May 2022 07:46 PM | அ+அ அ- |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக மயங்க் மார்கண்டே மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷஷான்க் மற்றும் மார்கோ யான்சனுக்குப் பதில் பிரியம் கர்க் மற்றும் ஃபசல் ஃபரூக்கி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.