திரிபாதி மீண்டும் அதிரடி: மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்துள்ளது.
திரிபாதி மீண்டும் அதிரடி: மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் பிரியம் கர்க் களமிறங்கினர்.

அபிஷேக் சர்மா 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், டேனியல் சாம்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, பிரியம் கர்க்குடன் ராகுல் திரிபாதி இணைந்தார். இந்த இணை துரிதமாகவே ரன் சேர்த்து மும்பைக்கு நெருக்கடியளித்தது.

பவர் பிளே முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது. இந்த இணை சிறப்பாக விளையாடி வந்ததையடுத்து, 10-வது ஓவரில் ரமண்தீப் சிங்கை அறிமுகப்படுத்தினார் ரோஹித் சர்மா. அந்த ஓவரின் 5-வது பந்தில் பிரியம் கர்க் 26 பந்துகளில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, திரிபாதி மற்றும் நிகோலஸ் பூரன் அதிரடியைத் தொடர்ந்தனர். திரிபாதியும் 32-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 14 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து அதிரடி பினிஷிங்குக்கு தயாரானது.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்கள் ஹைதராபாத் பேட்டர்களை கட்டுப்படுத்தினர். பூரன் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரில் திரிபாதி 76 ரன்களுக்கும், எய்டன் மார்கிரம் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சனும், வாஷிங்டன் சுந்தரும் ஓரளவுக்கு அதிரடி காட்டினர். வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுக்கு கடைசி பந்தில் போல்டானார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com