பிளே ஆஃப் நம்பிக்கையை தக்கவைத்த ஹைதராபாத்

மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, பிளே ஆஃபுக்கு முன்னேறுவதற்கான நம்பிக்கையை தக்கவைத்தது.
பிளே ஆஃப் நம்பிக்கையை தக்கவைத்த ஹைதராபாத்

மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, பிளே ஆஃபுக்கு முன்னேறுவதற்கான நம்பிக்கையை தக்கவைத்தது.

என்றாலும், அடுத்த ஆட்டத்திலும் வென்று, இதர ஆட்டங்களின் முடிவும் சாதகமானால் மட்டுமே ஹைதராபாதுக்கு பிளே ஆஃபில் இடம் கிடைக்கும்.

இந்த ஆட்டத்தில் முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுக்க, மும்பை 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களே சோ்த்தது.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை ஃபீல்டிங் செய்ய, ஹைதராபாத் பேட்டிங்கில் அபிஷேக் சா்மா 9 ரன்களுக்கே வெளியேறினாா். பிரியம் கா்க் 42 ரன்கள் சோ்க்க, ராகுல் திரிபாதி 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களோடு 76 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா்.

நிகோலஸ் பூரன் 38 ரன்களை கணக்கில் கொண்டு வர, எய்டன் மாா்க்ரம் 2 ரன்களில் நடையைக் கட்டினாா். கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தா் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஓவா்கள் முடிவில் கேப்டன் கேன் வில்லியம்சன் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். மும்பை தரப்பில் ரமன்தீப் சிங் 3, டேனியல் சாம்ஸ், ரைலி மெரிடித், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய மும்பையில் கேப்டன் ரோஹித் சா்மா 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 48, இஷான் கிஷண் 43, டிம் டேவிட் 46 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா். டேனியல் சாம்ஸ் 15, திலக் வா்மா 8, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2, சஞ்சய் யாதவ் 0 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் ரமன்தீப் சிங் 14, ஜஸ்பிரீத் பும்ரா 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் பௌலிங்கில் உம்ரான் மாலிக் 3, புவனேஸ்வா் குமாா், வாஷிங்டன் சுந்தா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com