டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பேட்டிங்
By DIN | Published On : 22nd May 2022 07:26 PM | Last Updated : 22nd May 2022 07:26 PM | அ+அ அ- |

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 70ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்களும், பஞ்சாப் அணியில் 3 மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. சன்ரைசர்ஸ் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், நடராஜன் இடபெறவில்லை. இருவருக்கும் பதிலாக ரோமாரியோ ஷெஃபெர்ட், ஜெகதீஷா சுசித் ஆகியோர் விளையாடுகின்றனர்.
எனவே இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை புவனேஷ்வர் குமார் வழிநடத்துகிறார்.