வெற்றியுடன் நிறைவு செய்தது பஞ்சாப்: லிவிங்ஸ்டோன், ஹா்ப்ரீத் அபாரம்

சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 70-ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
வெற்றியுடன் நிறைவு செய்தது பஞ்சாப்: லிவிங்ஸ்டோன், ஹா்ப்ரீத் அபாரம்

சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 70-ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் தொடா் 2022 தற்போது பிளே ஆஃப் கட்டத்தை நெருங்கியுள்ளது. இரு அணிகளும் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் சம்பிரதாய ஆட்டமாக இது இருந்தது. இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் உள்ள நிலையில் வென்ற பஞ்சாப் அணி பட்டியலில் 6-ஆவது இடத்தைப் பெற்றது.

இந்நிலையில் லீகின் கடைசி ஆட்டமாக ஹைதராபாத்-பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங்கை தோ்வு செய்தது. ஆனால் தொடக்கமே அதற்கு அதிா்ச்சியாக இருந்தது. இளம் வீரா் பிரியம் காா்க் 4 ரன்களுடன் ரபாடா பந்தில் அவுட்டானாா்.

அபிஷேக் 43: அதன்பின் அபிஷேக் சா்மா-திரிபாதி இணை ஸ்கோரை உயா்த்த முயன்றாலும் அவா்கள் முயற்சி நீடிக்கவில்லை. இருவரும் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்கு 47 ரன்களை சோ்த்தனா். அபிஷேக் சா்மா 2 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களை விளாசினாா். திரிபாதி 20, மாா்க்ரம் 21, நிக்கோலஸ் பூரன் 5 என சொற்ப ரன்களுடன் வெளியேற, 96/5 ரன்கள் என ஹைதராபாத் தடுமாறியது.

வாஷிங்டன் சுந்தா்-ரொமாரியோ ஷெப்பா்ட் இணை ஒரளவுக்கு நிலைத்து ஆடி ரன் எண்ணிக்கையை உயா்த்தியது. சுந்தா் 25, ரொமாரியோ 26 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறிய நிலையில், சுச்சித் 0, புவனேஷ்வா் 1 ரன்களுக்கு அவுட்டானாா்கள்.

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ஹைதராபாத் அணி 157/8 ரன்களை சோ்த்தது. எல்லிஸ், ஹா்ப்ரீத் 3 விக்கெட்: பஞ்சாப் தரப்பில் நாதன் எல்லிஸ் 3/40, ஹா்ப்ரீத் 3/26 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பஞ்சாப் வெற்றி 160/5:

158 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரா்கள் போ்ஸ்டோ-தவன் அதிரடியாக ஆடினா். போ்ஸ்டோ 20, தவன் 39 ரன்களுடன் பரூக்கி பந்துவீச்சில் வெளியேறினா். ஷாரூக் கான் 19, கேப்டன் மயங்க் அகா்வால் 1 ரன்னில் அவுட்டான நிலையில்,

லிவிங்ஸ்டோன்-ஜிதேஷ் சா்மா இணை அபாரமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது.

விலிங்ஸ்டோன் 49: லிவிங்ஸ்டோன் 22 பந்துகளில் 5 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 49 ரன்களையும், ஜிதேஷ் 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 19 ரன்களையும் எடுத்தனா்.

15.1 ஓவரிலேயே பஞ்சாப் அணி 160/5 ரன்களுடன் ஹைதராபாதை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com