ஹர்மன்ப்ரீத் கெளர் அபார பேட்டிங்: சரிவிலிருந்து மீண்டு 150 ரன்கள் எடுத்த சூப்பர்நோவாஸ்

3.5 ஓவர்களில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சூப்பநோவாஸ் அணி.
ஹர்மன்ப்ரீத் கெளர் (கோப்புப் படம்)
ஹர்மன்ப்ரீத் கெளர் (கோப்புப் படம்)

வெலாசிட்டி அணிக்கு எதிராக சூப்பநோவாஸ் அணி 20 ஓவர்களில்  5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. 

மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியின் முதல் ஆட்டத்தில் டிரெயில்பிளேஸர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சூப்பர்நோவாஸ் அணி. 

புணே நகரில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ் - வெலாசிட்டி ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வெலாசிட்டி கேப்டன் தீப்தி சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

3.5 ஓவர்களில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சூப்பநோவாஸ் அணி. இதன்பிறகு ஹர்மன்ப்ரீத் கெளரும் விக்கெட் கீப்பர் தானியா பாட்டியாவும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். தானியா 36 ரன்களும் ஹர்மன்ப்ரீத் கெளர் 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 71 ரன்களும் எடுத்தார்கள். இறுதியில் சூப்பர்நோவாஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com