இறுதி(யில்) இடம் யாருக்கு?: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
By DIN | Published On : 27th May 2022 07:14 PM | Last Updated : 27th May 2022 07:14 PM | அ+அ அ- |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஐபிஎல் நடப்பு தொடரின் "குவாலிஃபயர் - 2' ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஏற்கெனவே குவாலிஃபயர் 1-இல் குஜராத்துடன் மோதி தோல்வி கண்டு இந்த ஆட்டத்துக்கு வந்திருக்கிறது ராஜஸ்தான். முதல் வாய்ப்பை நழுவவிட்ட நிலையில் இந்த வாய்ப்பை தவறவிடாமல் கோப்பையை நோக்கி முன்னேறும் முனைப்பில் இருக்கிறது அந்த அணி.
மறுபுறம், கடைசி நேரத்தில் பிளே ஆஃபில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்ட பெங்களூர், எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னெளவை வெளியேற்றி அதே உத்வேகத்துடன் கோப்பையை வெல்லும் முனைப்பில் முன்னேறி வருகிறது.