ஐபிஎல்: அதிக விக்கெட்டுகள் பட்டியலில் முதலிடம் பிடிக்க சஹாலுக்கு எத்தனை விக்கெட்டுகள் தேவை?

ஐபிஎல் இறுதிப் போட்டி குஜராத் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இன்று    (மே-29) மாலை 8 மணிக்கு குஜராத் நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நடைப்பெற இருக்கிறது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஐபிஎல் இறுதிப் போட்டி குஜராத் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இன்று    (மே-29) மாலை 8 மணிக்கு குஜராத் நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நடைப்பெற இருக்கிறது. 

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் அதிக விக்கெட்டுகள் எடுப்பவர்களுக்கு ஊத நிற தொப்பி (பர்பிள் கேப்) வழங்கப்படும். இந்தாண்டு அதை வெல்லப் போகும் வீரர் யார் தெரியுமா? 

1. வனிந்து ஹசரங்கா ( ஆர்சிபி)    26 விக்கெட்டுகள் 57 ஓவர்கள்
2. யுஸ்வேந்திர சஹால் (ஆர்ஆர்)    26 விக்கெட்டுகள் 64 ஓவர்கள்
3. ககிசோ ரபாடா (பஞ்சாப்)    23 விக்கெட்டுகள் 48 ஓவர்கள்
4. உம்ரான் மாலிக் (எஸ்ஆர்எச்)    22 விக்கெட்டுகள் 49.1 ஓவர்கள் 

மேற்கண்ட வீரர்களில் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு ராஜஸ்தான் வீரர் சஹாலுக்கு மட்டுமே உள்ளது. ஒரு விக்கெட் எடுத்தால் போதுமானது. ஆனால் சஹால் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை எனில் பர்பிள் கேப் விருது ஹசரங்காவுக்கே போய்ச்சேரும். 

இரு வீரர்களும் சமமான விக்கெட்டுகள் எடுத்திருந்தால் யார் குறைவான பந்துகளில் விக்கெட் எடுத்துள்ளாரோ அவருக்குத்தான் விருது என்பது விதி. 

இதுவரை, ஐபிஎல் வரலாற்றில் டிவைன் ப்ராவோ மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com