ஐபிஎல்: ஹைதராபாத் ஹாட்ரிக் வெற்றி! பெங்களூரு போராடி தோல்வி

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிரான திங்கள்கிழமை ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் விளாசியது.
ஐபிஎல்: ஹைதராபாத் ஹாட்ரிக் வெற்றி! பெங்களூரு போராடி தோல்வி

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை திங்கள்கிழமை வீழ்த்தியது.

முதலில் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் சேர்க்க, பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களே எடுத்தது.

ஹைதராபாதுக்கு ‘ஹாட்ரிக்' வெற்றியாகவும், பெங்களூருக்கு தொடர்ந்து 5-ஆவது தோல்வியாகவும் இந்த ஆட்டம் இருந்தது.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் இன்னிங்ஸில் அபிஷேக் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹென்ரிக் கிளாசென், ஹெட்டுடன் கை கோக்க, அந்த பார்ட்னர்ஷிப் பெங்களூரு பெüலிங்கை முற்றிலுமாக சிதைத்தது.

ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்பட 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 4-ஆவது பேட்டராக எய்டன் மார்க்ரம் களம் புக, கிளாசென் 31 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 67 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

அடுத்து விளையாட வந்தார் அப்துல் சமத். ஓவர்கள் முடிவில் மார்க்ரம் 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 32, சமத் 10 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு தரப்பில் லாக்கி ஃபெர்குசன் 2, ரீஸ் டாப்லி 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 288 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய பெங்களூரில் விராட் கோலி 20 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் சேர்க்க, கேப்டன் பிளெஸ்ஸிஸ் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் விளாசினார்.

எனினும், வில் ஜாக்ஸ் 7, ரஜத் பட்டிதார் 9, செüரவ் செüஹான் 0, மஹிபால் லோம்ரோர் 19 ரன்களுக்கு வீழ்ந்தனர். தினேஷ் கார்த்திக் வழக்கம்போல் கடைசி ஆர்டரில் தனியொருவராக போராடி 35 பந்துகளில் 5 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 83 ரன்கள் விளாசி வீழ்ந்தார். நடப்பு சீசனில் மிக தூரமான சிக்ஸரை (108 மீட்டர்) விளாசி அவர் சாதனை படைத்தார்.

ஓவர்கள் முடிவில் அனுஜ் ராவத் 25, விஜய்குமார் வைஷாக் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 3, மயங்க் மார்கண்டே 2, நடராஜன் 1 விக்கெட் சாய்த்தனர்.

287/3

ஏற்கெனவே நடப்பு சீசனில் இதே ஹைதராபாத் அணி, கடந்த மாதம் 27-ஆம் தேதி மும்பைக்கு எதிராக 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் சோ்த்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், தற்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளது (287/3) அந்த அணி.

22

இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் தனது இன்னிங்ஸில் மொத்தமாக 22 சிக்ஸா்கள் விளாசியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸா்கள் இதுவாகும். முன்னதாக, பெங்களூரு அணி 2013-இல் புணே வாரியா்ஸுக்கு எதிராக 21 சிக்ஸா்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

4

பெங்களூரு பௌலா்கள் 4 போ் 50-க்கும் அதிகமாக ரன்கள் கொடுத்துள்ளனா். அந்த அணியின் வரலாற்றில் இதுவரை 2-க்கும் மேற்பட்ட பௌலா்கள் இவ்வாறு 50-க்கும் அதிகமாக ரன்கள் கொடுத்ததில்லை. இதுவே முதல் முறையாகும். (டாப்லி - 1/68, தயாள் - 0/51, ஃபொ்குசன் - 2/52, வைஷாக் - 0/64)

38

இரு அணிகளுமாக இந்த ஆட்டத்தில் 38 சிக்ஸர்கள் விளாசியுள்ளன. இதுவே ஒரு டி20 ஆட்டத்தில் அதிகபட்சமாகும். நடப்பு சீசனில் மும்பை - ஹைதராபாத் ஆட்டத்திலும் இதே எண்ணிக்கை எட்டப்பட்டது.

549

ஹைதராபாத் (287), பெங்களூரு (262) மொத்தமாக சேர்த்த 549 ரன்களே, ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச மொத்த ஸ்கோராகும். இதற்கு முன், இதே சீசனில் மும்பை, ஹைதராபாத் அணிகள் இணைந்து 523 ரன்கள் சேர்த்தது அதிகபட்சமாக இருந்தது.

81

இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமாக சேர்ந்து 81 பந்துகளை பவுண்டரிக்கோ, அதைக் கடந்து சிக்ஸராகவோ விரட்டியுள்ளன (43 பவுண்டரிகள், 38 சிக்ஸர்கள்). ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20-இல் இதுவே ஒரு ஆட்டத்தில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதே எண்ணிக்கையை மேற்கிந்தியத் தீவுகள் - தென்னாப்பிரிக்கா கடந்த 2023-இல் எட்டியுள்ளன.

இன்றைய ஆட்டம்

கொல்கத்தா - ராஜஸ்தான்

கொல்கத்தா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com