ஐபிஎல்: ராஜஸ்தான் அணி 193 ரன்கள் குவிப்பு!

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்படம் | ராஜஸ்தான் ராயல்ஸ் எக்ஸ் தளம்

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 17-ஆவது சீசன் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூரில் இன்று(மார்ச். 24) மாலை 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை லக்னௌ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் விளாசினார். 6 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை நிகழ்த்திய சஞ்சு சாம்சன், 52 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

194 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு லக்னௌ அணி பேட்டிங் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com