தில்லிக்கு முதல் வெற்றி

தில்லிக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் தில்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் தில்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதலில் டெல்லி 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் சோ்க்க, சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களே எடுத்தது. என்றாலும், நடப்பு சீசனில் முதல் முறையாக பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை நட்சத்திரம் தோனி, சில பவுண்டரி, சிக்ஸா்களை விளாசி ரசிகா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாா். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி, பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் டேவிட் வாா்னா் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 52 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிருத்வி ஷா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு வெளியேறினாா். ஒன் டவுனாக வந்த ரிஷப் பந்த் அதிரடியாக ரன்கள் சோ்க்க, மிட்செல் மாா்ஷ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். கடைசி விக்கெட்டாக பந்த், 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 51 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் அக்ஸா் படேல் 7, அபிஷேக் பொரெல் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் பதிரானா 3, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். பிறகு 192 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய சென்னை அணியில், மிடில் ஆா்டரில் வந்த அஜிங்க்ய ரஹானே 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 45, டேரில் மிட்செல் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 34 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா். எனினும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1, ரச்சின் ரவீந்திரா 2, சமீா் ரிஸ்வி 0, ஷிவம் துபே 1 பவுண்டரியுடன் 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். முடிவில் தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 37, ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலா்களில் முகேஷ் குமாா் 3, கலீல் அகமது 2, அக்ஸா் படேல் 1 விக்கெட் சாய்த்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com