இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

குவாலிஃபயர் 1 ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி
இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

அகமதாபாத்: ஐபிஎல் போட்டியின் "குவாலிஃபயர் 1' ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

தற்போது ஹைதராபாத், மீண்டும் இறுதி ஆட்ட வாய்ப்புக்காக "குவாலிஃபயர் 2' ஆட்டத்தில், ராஜஸ்தான் அல்லது பெங்களூருவை சந்திக்கும்.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத், பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய டிராவிஸ் ஹெட் 2-ஆவது பந்திலேயே ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். உடன் வந்த அபிஷேக் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹைதராபாத் அதிர்ச்சி கண்டது.

3-ஆவது பேட்டர் ராகுல் திரிபாதி அதிரடியாக ரன்கள் சேர்த்தார்.

மறுபுறம், நிதீஷ்குமார் ரெட்டி 9, ஷாஹாஸ் அகமது 0 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேற, 39 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஹைதராபாத். இந்நிலையில், திரிபாதியுடன் ஹென்ரிக் கிளாசென் இணைய, இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது.

இதில் முதலில் கிளாசென் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, திரிபாதி 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55 ரன்களுக்கு வீழ்ந்தார்.

பின்னர் விளையாடியோரில் சன்வீர் சிங் 0, அப்துல் சமத் 2 சிக்ஸர்களுடன் 16, புவனேஷ்வர் குமார் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 8-ஆவது பேட்டராக வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 30 ரன்கள் விளாசி கடைசி விக்கெட்டாக சரிந்தார்.

முடிவில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 7 ரன்களுடன் இருந்தார். கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3, வருண் சக்கரவர்த்தி 2, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன் ஆண்ட்ரே ரஸ்ùஸல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 160 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 23, உடன் வந்த சுனில் நரைன் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி, 97 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தியது.

வெங்கடேஷ் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 51, ஷ்ரேயஸ் 24 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் விளாசியிருந்தனர். ஹைதராபாத் பெüலிங்கில் பேட் கம்மின்ஸ், நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

சுருக்கமான ஸ்கோர்

ஹைதராபாத்

159/10

(19.3 ஓவர்கள்)

ராகுல் திரிபாதி 55

ஹென்ரிக் கிளாசென் 32

பேட் கம்மின்ஸ் 30

பந்துவீச்சு

மிட்செல் ஸ்டார்க் 3/34

வருண் சக்கரவர்த்தி 2/26

ஆண்ட்ரே ரஸ்ùஸல் 1/15

கொல்கத்தா

164/2

(13.4 ஓவர்கள்)

ஷ்ரேயஸ் ஐயர் 58*

வெங்கடேஷ் ஐயர் 51*

ரஹ்மானுல்லா குர்பாஸ் 23

பந்துவீச்சு

டி.நடராஜன் 1/22

பேட் கம்மின்ஸ் 1/38

புவனேஷ்வர் குமார் 0/22

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com