மூணு நாள்ல பார்க்கலாம்: சிஎஸ்கேவுக்கு ஜாலியாக எச்சரிக்கை விடுக்கும் கேகேஆர்!

சென்னை - கொல்கத்தா இடையிலான ஐபிஎல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் வரும் செவ்வாயன்று...
மூணு நாள்ல பார்க்கலாம்: சிஎஸ்கேவுக்கு ஜாலியாக எச்சரிக்கை விடுக்கும் கேகேஆர்!

நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், தனது சிக்ஸர் மழையால் பெங்களூரு அணியிடமிருந்த வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறித்து கொல்கத்தாவுக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித்தந்தார் ஆண்ட்ரு ரஸ்ஸல்.

முதலில் ஆடிய பெங்களூரு 205/3 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 206/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 7 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 13 பந்துகளில் 48 ரன்களை விளாசி கிரிக்கெட் உலகைத் தன் பக்கம் திருப்பியுள்ளார் ரஸ்ஸல்.

ரஸ்ஸலின் இந்த ஆட்டத்தைச் சற்று நடுக்கத்துடன் பாராட்டி ஒரு ட்வீட் வெளியிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்கு கொல்கத்தா அணி ட்விட்டர் கணக்கிலிருந்து, மூணு நாள்ல மீட் பண்ணலாம் எனப் பதில் வந்தது. 

சென்னை - கொல்கத்தா இடையிலான ஐபிஎல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் வரும் செவ்வாயன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அந்தக் கிண்டல் கலந்த மிரட்டலான ட்வீட்டைப் பதிலாகத் தந்துள்ளது கேகேஆர் நிர்வாகம். கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அளித்த பதில் இது என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். மேலும், அந்த மிரட்டலான பதிலை ரசிக்கும் விதமாக நடிகர் வடிவேலுவின் புகைப்படம் மற்றும் படக்காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது சிஎஸ்கே ட்விட்டர் கணக்கு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com