ஐபிஎல் 2019: கில்லியாகப் பந்துவீசுபவர்களும் எப்படிப் போட்டாலும் அடி வாங்குகிற பந்துவீச்சாளர்களும்!

பேட்ஸ்மேன்களை விடவும் அணிகளின் வெற்றிகளில் அதிகப் பங்களிக்கும் பந்துவீச்சாளர்களில் முத்திரைப் பதித்தவர்கள்...
ஐபிஎல் 2019: கில்லியாகப் பந்துவீசுபவர்களும் எப்படிப் போட்டாலும் அடி வாங்குகிற பந்துவீச்சாளர்களும்!

மார்ச் 23 அன்று ஐபிஎல் 2019 போட்டி ஆரம்பித்தது. இன்றோடு மூன்று வாரங்கள் ஆகிவிட்டன.

முதலிடத்தில் உள்ள சென்னை அணிக்கு அதிகம் உதவுவது பந்துவீச்சாளர்கள்தாம். அதேபோல கடைசி இடத்தில் உள்ள ஆர்சிபி அணியை மிகவும் ஏமாற்றியது பந்துவீச்சாளர்கள்தாம். 

பேட்ஸ்மேன்களை விடவும் அணிகளின் வெற்றிகளில் அதிகப் பங்களிக்கும் பந்துவீச்சாளர்களில் முத்திரைப் பதித்தவர்கள் யார் யார்? எப்படிப் பந்துவீசினாலும் அடிவாங்கும் பந்துவீச்சாளர்கள் யார் யார்?

ஐபிஎல் 2019: சிறந்த எகானமி (குறைந்தது 10 ஓவர்கள்)

5.12 - ஹர்பஜன் 
5.49 - நபி 
5.50 - ஜடேஜா 
5.61 - தாஹிர் 
5.83 - ரஷித் கான் 
5.90 ராகுல் சஹார் 
6.29 தீபக் சஹார்
6.65 கோபால்
6.70 எம் அஸ்வின் 
6.73 அக்‌ஷர் படேல்

(முதல் 10 பந்துவீச்சாளர்களில் 9 பேர் சுழற்பந்துவீச்சாளர்கள், ஒருவர் மட்டும் வேகப்பந்துவீச்சாளர், சிஎஸ்கேவின் தீபக் சஹார்.)

அதிக டாட் பந்துகள்

84 - தீபக் சஹார்
67 - ஷமி
66 - தாஹிர்
66 - பிரசித் கிருஷ்ணா
65 - ரஷித் கான்
65 - ஆர்ச்சர்
65 - சைனி
64 - பும்ரா
63 - ரபாடா
61 - ஜடேஜா

ஐபிஎல் 2019: மோசமான எகானமி (குறைந்தது 10 ஓவர்கள்)

11.30 உனாட்கட்
11.22 ஸ்டோக்ஸ்
10.76 ஃபர்குசன்
10.57 பாண்டியா
10.14 ஷர்துல் தாக்குர் 
9.92 சாம் கரண்
9.90 மெக்லெனகன்
9.69 ரஸ்ஸல்
9.58 டை
9.54 மலிங்கா

(முதல் 10 பந்துவீச்சாளர்களில் அனைவருமே வேகப்பந்துவீச்சாளர்கள். ஒரே ஒரு சிஎஸ்கே வீரர் - ஷர்துல் தாக்குர்).

மெயிடன் ஓவர்கள் வீசியவர்கள்

2 ஆர்ச்சர்
1 சஹால்
1 தீபக் சஹார்
1 கோபால்
1 ஹர்பஜன்
1 தாஹிர்
1 ஜடேஜா
1 ஜோசப்
1 குல்கர்னி
1 சிராஜ்
1 இஷாந்த்

(இந்த 12 மெயிடன் ஓவர்களில் சிஎஸ்கேவும் ராஜஸ்தானும் தலா 4 ஓவர்களை வீசியுள்ளன.)

அதிக விக்கெட்டுகள் எடுத்த அணிகள்

50 சென்னை (2 ரன் அவுட்)
50 தில்லி (5)
44 பஞ்சாப் (5)
35 மும்பை (1)
35 ஹைதராபாத் (4)
27 பெங்களூர் (1)
26 ராஜஸ்தான் (1)
25 கொல்கத்தா (1)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com