சுடச்சுட

  

  ஆர்ச்சரும் அற்புதம், அஸ்வினும் அற்புதம்: முதலில் பேட் செய்த பஞ்சாப் 182 ரன்கள் குவிப்பு  

  By DIN  |   Published on : 16th April 2019 09:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Archer

  நன்றி: iplt20.com


  ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் குவித்துள்ளது. 

  ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்கிழமை) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. கிறிஸ் கெயில் 22 பந்துகளில் 30 ரன்கள், மயங்க் அகர்வால் 12 பந்துகளில் 26 ரன்கள் என அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். 

  தொடர்ந்து களமிறங்கிய மில்லரும் அதிரடியாக விளையாட பஞ்சாப் அணியின் ரன் வேகம் 8-இல் நீடித்து வந்தது. இவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அரைசதம் அடித்த ராகுல் 47 பந்துகளில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

  அதன்பிறகு, ராஜஸ்தான் அணி கடைசி 3 ஓவர்களை சிறப்பாக வீசியது. 

  18-ஆவது ஓவரை வீசிய உனத்கட், கடைசி பந்தில் கொடுத்த பவுண்டரி உட்பட 9 ரன்கள் கொடுத்து ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். 19-ஆவது ஓவரை ஆர்ச்சர் மிகச் சிறப்பாக வீசி 3 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து நிகோலஸ் பூரன் மற்றும் மன்தீப் சிங் விக்கெட்டை வீழ்த்தினார். 

  கடைசி ஓவரை வீசிய தவல் குர்கர்னி முதல் பந்திலேயே மில்லரை வீழ்த்தினார். மில்லர் 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். ஆனால், அடுத்த 5 பந்துகளில் கேப்டன் அஸ்வின் அதிரடி காட்டி மிரட்டினார். 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட கடைசி 5 பந்துகளில் 18 ரன்கள் குவிக்கப்பட்டது.   

  இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. 

  ராஜஸ்தான் அணி சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், சோதி, உனத்கட், குல்கர்னி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai