சுடச்சுட

  

  அசத்திய அஸ்வின்: புள்ளிகள் பட்டியலில் மேலேறிய பஞ்சாப் அணி!

  By எழில்  |   Published on : 17th April 2019 10:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ashwin_captain12

   

  நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப். முதலில் ஆடிய பஞ்சாப் 182/6 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

  நேற்றைய ஆட்டத்தில் அசத்தலான பங்களிப்பின் மூலம் பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார் அஸ்வின். கடைசி ஓவரில் களமிறங்கிய அஸ்வின் இரண்டு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார். இதனால் பஞ்சாப் அணி, கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தது. அதுதான் கடைசியில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். அவருடைய அருமையான தலைமைப்பண்புக்காகவும் பங்களிப்புக்காகவும் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதனால் புள்ளிகள் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது பஞ்சாப்.

  புள்ளிகள் பட்டியல்

   அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
   சென்னை   8  7  1  14  +0.288
   தில்லி  8  5  3  10  +0.418
   மும்பை  8  5  3  10  +0.244
   பஞ்சாப்  9  5  4  10  -0.015
   கொல்கத்தா  8  4  4  8  +0.350
   ஹைதராபாத்   7  3  4  6  +0.409
   ராஜஸ்தான்  8  2  6  4  -0.589
   பெங்களூர்  8  1  7  2  -1.114
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai