சுடச்சுட

  

  ஐபிஎல் 2019: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்குக் காயம்!

  By எழில்  |   Published on : 17th April 2019 02:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  varun1211

   

  இந்த வருட ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாகத் தேர்வாகியுள்ள தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து பஞ்சாப் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்திருந்தபோது வருண் சக்கரவர்த்தியின் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். விரைவில் குணமாகி வருவார் என்று கூறப்படுகிறது. 

  தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியை ஐபிஎல் ஏலத்தில் 8.40 கோடிக்குத் தேர்வு செய்தது அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி முதல் ஓவரில் 25 ரன்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் 3 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார் சுனில் நரைன். அதன்பிறகு வீசிய இரண்டு ஓவர்களிலும் ரன்களைக் கட்டுப்படுத்தியதோடு அபாரமாக விளையாடி வந்த நிதிஷ் ராணாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார் வருண். கடைசியில் அவர் 3 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 35 ரன்கள் கொடுத்திருந்தார். எனினும் முதல் ஓவரில் 25 ரன்களைக் கொடுத்த வருண், ஒரு விநோதமான சாதனையைச் செய்துள்ளார். ஐபிஎல் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரில் அதிக ரன்களைக் கொடுத்த வீரர் என்கிற நிலைமைக்கு ஆளாகியுள்ளார் வருண்.

  அந்த ஆட்டத்துக்குப் பிறகு வருண் சக்கரவர்த்தி, பஞ்சாப் அணி விளையாடிய எந்த ஓர் ஆட்டத்திலும் இடம்பெறவில்லை. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai