40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது மும்பை

டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது மும்பை


டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணிக்கு ஷிகர் தவான் அதிரடி தொடக்கம் தந்தார். சுழற்பந்துவீச்சாளர்கள் பந்தையும் பவுண்டரிக்கு விரட்டி மும்பைக்கு நெருக்கடியளித்த தவான் 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதன்பிறகு, டெல்லி அணியின் பேட்டிங் சரிவைக் கண்டது. 

பிருத்வி ஷா 24 பந்துகளில் 20 ரன்கள், முன்ரோ 3 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 3 ரன்கள், பந்த் 7 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த சரிவில் இருந்து டெல்லி அணியால் மீளவே முடியவில்லை. ஒரு சிக்ஸர் அடித்து கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்த மோரிஸ் 11 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து, அக்ஸர் படேலும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

தவான் விக்கெட்டுக்கு பிறகு தொடர்ந்து சரிவைக் கண்ட டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளையும், பூம்ரா 2 விக்கெட்டுகளையும், க்ருணால் பாண்டியா, ஹார்திக் பாண்டியா மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com