தொடர்ந்து போராடும் அஸ்வின்: சிக்ஸர் மழை பொழிந்த ஆட்டத்தில் அசத்தலான பந்துவீச்சு!

பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்த பெங்களூர் ஆடுகளத்தில் தனி ஒருவனாக பஞ்சாப்பின் வெற்றிக்குப் போராடியுள்ளார் அஸ்வின்...
தொடர்ந்து போராடும் அஸ்வின்: சிக்ஸர் மழை பொழிந்த ஆட்டத்தில் அசத்தலான பந்துவீச்சு!

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது வெற்றியைப் பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

முதல் 6 ஆட்டங்களில் தோல்வியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, அடுத்த 5 ஆட்டங்களில் நான்கை வென்று அசத்தியுள்ளது. அதுவும் கடந்த 3 ஆட்டங்களைத் தொடர்ச்சியாக வென்று பிளேஆஃப் கனவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இதைவிடவும் இந்த வெற்றியின் மூலம் ஆரம்பத்திலிருந்து கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி தற்போது ஒரு படி மேலேறி 8 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் அஸ்வினின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது. 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், நேற்று பெங்களூர் அணி 20 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தது. நேற்றைய ஆட்டத்தில் 3 ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர்களும் 11 ஓவர்களில் 101 ரன்களை வாரி வழங்கினார்கள். மேலும் ஆர்சிபி அணியில் எந்தவொரு சுழற்பந்துவீச்சாளரும் 4 ஓவர்களை வீசவில்லை. இந்தச் சூழலில் அஸ்வின் பந்துவீச்சு நம்பமுடியாத வகையில் நேற்று இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்த பெங்களூர் ஆடுகளத்தில் தனி ஒருவனாக பஞ்சாப்பின் வெற்றிக்குப் போராடியுள்ளார் அஸ்வின். 

விரல் சுழற்பந்துவீச்சாளர்களில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் அஸ்வின் தான். 12 விக்கெட்டுகள். சுழற்பந்துவீச்சாளர்களில் இம்ரான் தாஹிர், சஹால் ஆகிய இருவர் மட்டுமே அஸ்வினை விடவும் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள். இந்திய ஒருநாள் அணியில் கடந்த சில வருடங்களாக இடம்பெறாத நிலையில் ஐபிஎல்-லில் மிகச்சிறப்பாகப் பந்துவீசி வரும் அஸ்வின், வரும் காலங்களில் மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com