விமரிசனங்களுக்கு பதிலடி தந்தார் கார்த்திக்: கொல்கத்தா 175 ரன்கள் குவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.  
நன்றி: iplt20.com
நன்றி: iplt20.com


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது. 

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். கிறிஸ் லின் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் வருண் ஆரோன் பந்தில் போல்டானார். அவரைத்தொடர்ந்து, 14 எடுத்திருந்த ஷுப்மன் கில்லையும் வருண் ஆரோன் வீழ்த்தினார். 21 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வந்த நிதிஷ் ராணாவும் ஆட்டமிழக்க கொல்கத்தா அணி திணறியது. 

இதையடுத்து, கேப்டன் என்ற முறையில் தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்ததார். இந்த முறை நடுவரிசை பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட சுனில் நரைன், கார்த்திக்கு ஒத்துழைப்பு தந்து சற்று நேரம் தாக்குப்பிடித்தார். ஆனால், அவரும் 11 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். 

இந்த போட்டியில் 12-ஆவது ஓவரிலேயே ரஸல் களமிறங்கியதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், அவர் வழக்கத்துக்கு மாறாக சிக்ஸர்கள் அடிக்க சற்று திணறினார். இதனிடையே கார்த்திக் தனது 35-ஆவது பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ரஸல் 14 ரன்கள், பிராத்வைட் 5 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இது கொல்கத்தா அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.  

இதனால், ஃபினிஷிங் பொறுப்பு கார்த்திக்கிடம் சென்றது. கார்த்திக்கும் அரைசதம் அடித்த பிறகு இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடைய அதிரடியால் 16-வது ஓவரில் 15 ரன்கள், 17-வது ஓவரில் 12 ரன்கள், 18-ஆவது ஓவரில் 14 ரன்கள், 19-வது ஓவரில் 16 ரன்கள் மற்றும் 20-வது ஓவரில் 18 ரன்கள் என கடைசி 5 ஓவரில் மட்டும் கொல்கத்தா அணி 75 ரன்கள் குவித்தது. இதில், கடைசி 5 ஓவரில் கார்த்திக் மட்டும் 55 ரன்கள் குவித்தார். 

இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கார்த்திக் 50 பந்துகளில் 7 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உட்பட 97 ரன்கள் குவித்தார். கொல்கத்தா இன்னிங்ஸில் கார்த்திக்குக்கு அடுத்தபடியான அதிகபட்ச ஸ்கோர் 21 ரன்கள் ஆகும். இதன்மூலம், கார்த்திக்கின் பேட்டிங் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com