அணிக்குள் விவாதங்கள், புறங்கூறுதல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்: தினேஷ் கார்த்திக்

டி20 ஆட்டம் என்பது அதிகம் அழுத்தம் தரக்கூடியது. அதனால் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சுதந்தரமாக, தகுந்த வாய்ப்பு பெற்று, நல்ல உடல்நலத்துடன் உள்ளார்களா என...
அணிக்குள் விவாதங்கள், புறங்கூறுதல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்: தினேஷ் கார்த்திக்

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது மும்பை. முதலில் ஆடிய கொல்கத்தா 232/2 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய மும்பை 198/7 ரன்களை எடுத்து தோல்வியுற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 232 ரன்களை குவித்தது கொல்கத்தா. கடைசி 3 ஓவர்களில் 55 ரன்களை குவித்தனர் கொல்கத்தா அணியினர். 8 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 80 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார் ரஸ்ஸல். கடினமான இலக்கை எதிர்கொள்ளமுடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை அணி. 9 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 91 ரன்களை விளாசினார் ஹார்திக் பாண்டியா. 17 பந்துகளில் துரிதமாக 50 ரன்களை எடுத்து இந்த ஐபிஎல்-லில் அதிவேக அரை சதத்தைப் பதிவு செய்தார் பாண்டியா.

ரஸ்ஸல், பாண்டியா என இருவருமே சிக்ஸர் மழை பொழிந்து கொல்கத்தா ரசிகர்களை மகிழ்வூட்டினார்கள். எனினும் ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி வெற்றி பெற்று பிளேஆஃப்-புக்குத் தொடர்ந்து முயற்சி செய்கிறது.

வெற்றிக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டி20 ஆட்டம் என்பது அதிகம் அழுத்தம் தரக்கூடியது. அதனால் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சுதந்தரமாக, தகுந்த வாய்ப்பு பெற்று, நல்ல உடல்நலத்துடன் உள்ளார்களா எனக் கவனமாக உள்ளேன். இதுபோன்ற சூழலில் அணிக்குள் நிறைய விவாதங்கள், புறங்கூறுதல்கள் நடக்க வாய்ப்புண்டு. அதை அறிந்துகொண்டு அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். கடைசியில் இது ஒரு விளையாட்டு மட்டுமே. உங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்குத் திறமையை வெளிப்படுத்துகிறீர்கள். வீரர்களிடம் எப்போம் புன்னகையுடன் பேசவேண்டும். அனைவரிடமும் நல்லவிதமாக நடந்துகொள்ளவேண்டும். எல்லோரும் வெற்றிக்காகக் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். ஆட்டத்தில் விளையாடிய பிறகு அனைவரும் வீட்டுக்குச் சென்று மகிழ்வுடன் இருக்கவேண்டும். என் தலைமையில் விளையாடிய வீரர்கள் நல்ல அனுபவம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். தோற்கும்போது இவர் மோசமாக நடந்துகொள்வார் என என்னைப் பற்றி நினைக்ககூடாது. அதை நன்கு அறிந்து செயல்படுகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com