5000 ரன்களை எட்டிய முதல் வீரர்: ஐபிஎல் கிரிக்கெட்டில் ரெய்னா சாதனை

பெங்களூருக்கு எதிரான போட்டியில் 15 ரன்களை எடுத்த ரெய்னா ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 
புகைப்படம்: iplt20.com
புகைப்படம்: iplt20.com


பெங்களூருக்கு எதிரான போட்டியில் 15 ரன்களை எடுத்த ரெய்னா ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 

12-ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பந்துவீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 70 ரன்களுக்கு சுருட்டியது. 

இதைத்தொடர்ந்து, எளிய இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது. வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்ததையடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். அவர், தனது 15-ஆவது எடுத்த போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 

இந்த போட்டி தொடங்குவதற்கு முன், 5000 ஐபிஎல் ரன்களை எடுக்கும் முதல் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு கோலி மற்றும் ரெய்னா இடையே நிலவி வந்தது. காரணம், இந்த போட்டி தொடங்குவதற்கு முன் விராட் கோலி 4948 ரன்களிலும், ரெய்னா 4985 ரன்களிலும் இருந்தனர். அதனால், இந்த போட்டியில் முதலில் கோலி 52 ரன்கள் எடுத்தால், 5000 ஐபிஎல் எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறலாம். அதேசமயம், ரெய்னா முதலில் 15 ரன்கள் எடுத்தால், 5000 ஐபிஎல் எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெறலாம் என்ற நிலை இருந்தது. 

இந்நிலையில், முதலில் பெங்களூரு பேட்டிங் செய்ததால், கோலி மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரெய்னா மீது எதிர்பார்ப்பு எழுந்தது. அவர், 15 ரன்களை எடுத்து 5000 ரன்களை கடந்தார். ரெய்னா இந்த மைல்கல்லை 173-ஆவது ஐபிஎல் இன்னிங்ஸில் அடைந்துள்ளார்.   

இந்த போட்டியில் அவர் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com