ஐபிஎல்: சாம்பியன்களும் கொண்டாட்டங்களும்! (படங்கள்)

இதுவரை ஐபிஎல் போட்டியை வென்ற அணிகள் எவை? புகைப்படங்களுடன் கொண்டாட்டத்தைக் கண்டுகளிக்கலாம்...
ஐபிஎல்: சாம்பியன்களும் கொண்டாட்டங்களும்! (படங்கள்)

நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2019 (12-வது சீசன் போட்டி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையில் சிஎஸ்கேவும், இந்திய கேப்டன் கோலி தலைமையில் ஆர்சிபி அணிகளும் களமிறங்குகின்றன. 

இதுவரை ஐபிஎல் போட்டியை வென்ற அணிகள் எவை? புகைப்படங்களுடன் கொண்டாட்டத்தைக் கண்டுகளிக்கலாம்...

ஐபிஎல் சாம்பியன்கள்

2008: ராஜஸ்தான் ராயல்ஸ்

2009: டெக்கான் சார்ஜர்ஸ்

2010: சென்னை சூப்பர் கிங்ஸ்

2011: சென்னை சூப்பர் கிங்ஸ்

2012: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2013: மும்பை இந்தியன்ஸ்

2014: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2015: மும்பை இந்தியன்ஸ்

2016: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2017: மும்பை இந்தியன்ஸ்

2018: சென்னை சூப்பர் கிங்ஸ்

2008 

இறுதிச்சுற்றில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் ஐபிஎல் போட்டியை ராஜஸ்தான் வென்றது.

2009 

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரைத் தோற்கடித்து கோப்பையை வென்றது டெக்கான் சார்ஜர்ஸ். 

2010

சென்னை சூப்பர் கிங்ஸ் முதல்முறையாகக் கோப்பையை வென்றது. மும்பையை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

2011

மீண்டும் கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். 58 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரைத் தோற்கடித்தது.

2012

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் அடிப்பதைத் தடுத்து நிறுத்தியது கொல்கத்தா. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

2013

மீண்டுமொரு இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவியது சிஎஸ்கே. மும்பை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

2014

3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபைத் தோற்கடித்து கோப்பையை வென்றது கொல்கத்தா.

2015

இந்தமுறையும் சிஎஸ்கே-வால் கோப்பையை வெல்லமுடியவில்லை. மும்பை 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.


 
2016 

இறுதிச்சுற்றில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதின. 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது ஹைதராபாத்.

2017

இந்த வருடம் கோப்பையை வென்று சாதனை படைத்தது மும்பை அணி. புணே அணியை 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்கிற பெருமையைப் பெற்றது.

2018

2 வருட இடைக்காலத் தடைக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ், மூன்றாவது முறையாக. ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை.  

==

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com