ஹர்பஜன், தாஹிர் சுழலில் சுருண்டது பெங்களூரு: 70 ரன்களுக்கு ஆல் அவுட்

12-ஆவது ஐபிஎல் சீசனின் முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


12-ஆவது ஐபிஎல் சீசனின் முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

12-ஆவது ஐபிஎல் சீசனின் முதல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் கேப்டன் கோலி மற்றும் பார்த்திவ் படேல் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், அந்த அணி தொடக்கத்தில் ரன் குவிக்க திணறியது. இந்த அழுத்தத்தால் ஹர்பஜன் பந்தில் பவுண்டரி அடிக்க முயன்ற கோலி ஜடேஜா வசம் சிக்கி முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவர் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

இதைத்தொடர்ந்து, அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். மொயின் அலி 9, டி வில்லியர்ஸ் 9, ஹெத்மயர் ரன் ஏதும் எடுக்காமல் என சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வரிசையாக பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இந்த நெருக்கடியால் அடுத்து களமிறங்கிய ஷிவம் டூபே, நவ்தீப் சைனி போன்ற இளம் வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

பார்த்திவ் படேல் மட்டும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை இலக்கு ரன்னை கடந்து விளையாட மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களுடன் ஆட்டமிழந்தனர். எனினும், அவர் கடைசி விக்கெட்டாக 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், 17.1 ஓவரில் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டையும், டுவைன் பிராவோ 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com