ஐபிஎல் ஆட்டத்தில் காயமடைந்த பும்ரா: நிலைமையைக் கவனித்து வரும் விராட் கோலி!

பும்ராவின் காயம் குறித்து எல்லோரும் கவனித்துக்கொண்டிருக்கிறோம். உலகக் கோப்பைப் போட்டியில்...
ஐபிஎல் ஆட்டத்தில் காயமடைந்த பும்ரா: நிலைமையைக் கவனித்து வரும் விராட் கோலி!

பலம் வாய்ந்த மும்பையை அதன் சொந்த மைதானத்திலேயே 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தில்லி அணி. முதலில் ஆடிய தில்லி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய மும்பை 176 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. 

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரும் மும்பை இந்தியன்ஸ் வீரருமான ஜஸ்ப்ரித் பும்ராவுக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பந்துவீசி முடித்தபிறகு பேட்ஸ்மேன் அடித்த பந்தை ஃபீல்டிங் செய்ய முயன்றபோது அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பதற்றமானார்கள். இன்னும் சில மாதங்களில் உலகக் கோப்பைப் போட்டி தொடங்கவுள்ள நிலையில் காயம் காரணமாக பும்ராவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்று பிரார்த்தனை செய்தார்கள். 

இந்நிலையில் பும்ராவின் காயம் சில நாள்களில் சரியாகிவிடும் என்று அறியப்படுகிறது. பும்ரா நன்குக் குணமாகி வருகிறார். அவருடைய உடற்தகுதி குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பும்ராவின் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார் இந்திய கேப்டன் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணி பிஸியோ பாட்ரிக் ஃபர்ஹத், மும்பை இந்தியன்ஸ் பிஸியோ நிதின் படேலிடம் பும்ராவின் உடல்நலன் குறித்து விசாரித்துள்ளார். பும்ராவின் நிலை குறித்து விராட் கோலி கூறியுள்ளதாவது:

பும்ராவின் காயம் குறித்து எல்லோரும் கவனித்துக்கொண்டிருக்கிறோம். உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரரான பும்ராவின் காயம் குறித்து இன்று காலை நிதினிடம் பேசினார் பாட்ரிக். ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை. அடுத்த  ஆட்டத்தில் பும்ரா விளையாட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் கோலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com