Enable Javscript for better performance
பஞ்சாப்பை பந்தாடிய கொல்கத்தா பேட்ஸமேன்கள்: 20 ஓவரில் 218 ரன்கள் குவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சாப்பை பந்தாடிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்: 20 ஓவரில் 218 ரன்கள் குவிப்பு

    By DIN  |   Published on : 27th March 2019 10:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Rana_Robin_Russell

    புகைப்படம்: iplt20.com


    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்துள்ளது. 

    ஐபிஎல்-இன் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். 

    இந்த முறை கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். இதில், சுனில் நரைன் அதிரடியாக ரன் குவிக்க லின் தொடக்கத்தில் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    இந்த ஜோடி 34 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் லின் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, நரைனும் ஆட்டமிழந்தார். நரைன் 9 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். 

    உத்தப்பா - ராணா ஜோடி:

    அதன்பிறகு, உத்தப்பாவும் ராணாவும் இணைந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் 20 பந்துகளில் நிதிஷ் ராணா நிதானமாக விளையாடி உத்தப்பாவுக்கு ஒத்துழைப்பு தந்தார். உத்தப்பா அதிரடியாக ரன் குவித்து வந்தார். இதன்மூலம், முதல் 10 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பிறகு, நிதிஷ் ராணா டாப் கியருக்கு மாறி சிக்ஸர்களாக அடிக்க தொடங்கினார். இதன்மூலம், அவர் 28-ஆவது பந்தில் அரைசதத்தை அடித்தார். அரைசதம் அடித்த பிறகும், சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 34 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடங்கும். 

    அதன்பிறகு, ரஸல் களமிறங்கினார். இதனிடையே ராபின் உத்தப்பாவும் 41-ஆவது பந்தில் தனது அரைசதத்தை எட்டினார். ராணா விக்கெட்டுக்கு பிறகு அடுத்த 3 ஓவர்களில் கொல்கத்தா அணி 17 ரன்கள் மட்டுமே குவித்தது. 

    ஆட்டத்தின் போக்கை மாற்றிய அந்த 'நோ-பால்':

    இதனிடையே ஷமி வீசிய 17-ஆவது ஓவரில் ரஸல் அற்புதமான யார்கர் பந்தில் போல்டானார். ஆனால், வட்டப்பகுதிக்குள் 3 பீல்டர்கள் மட்டுமே இருந்ததால் அது நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. வட்டப்பகுதிக்குள் குறைந்தபட்சம் 4 பீல்டர்களாவது இருக்க வேண்டும். 

    இதைத்தொடர்ந்து, ரஸல் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களில் ரன் குவிக்க தொடங்கினார். டை வீசிய 18-ஆவது ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள், ஷமி வீசிய 19-ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி உட்பட 25 ரன்கள் குவித்தனர். எனினும், கடைசி ஓவரை டை சிறப்பாக வீசியதால் ரஸல் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 48 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, கடைசி பந்தில் உத்தப்பா பவுண்டரி அடித்ததால் கடைசி ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. 

    இதன்மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது. 

    இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த உத்தப்பா 50 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai