மும்பை - ஹைதராபாத் இன்று மோதல்: பிளே ஆஃப் வாய்ப்புகளை இழக்கும் அணிகள் எவை?

மும்பை - ஹைதராபாத் இடையிலான மோதல் பெரும்பாலான அணிகளிடையே ஆர்வத்தை... 
மும்பை - ஹைதராபாத் இன்று மோதல்: பிளே ஆஃப் வாய்ப்புகளை இழக்கும் அணிகள் எவை?

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். மும்பை 14 புள்ளிகளுடனும் ஹைதராபாத் 12 புள்ளிகளுடனும் முறையே புள்ளிகள் பட்டியலில் 3 மற்றும் 4-ம் இடங்களில் உள்ளன. 

இந்த இரு அணிகளின் ஆட்டத்தை - ஏற்கெனவே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற சென்னை, தில்லி மற்றும் போட்டியிலிருந்து வெளியேறிய பெங்களூர் ஆகிய அணிகள் தவிர, இதர அணிகள் ஆர்வமாகக் கண்காணிக்கின்றன. குறைந்த புள்ளிகள் கொண்ட ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு யாராவது கைத்தூக்கிவிட்டால் தான் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியும் என்கிற நிலைமை உள்ளது. இதனால் மும்பை - ஹைதராபாத் இடையிலான மோதல் பெரும்பாலான அணிகளிடையே ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. இரு அணிகளில் எது தோற்றாலும் எது ஜெயித்தாலும் அது மற்ற அணிகளுக்கு உதவியாகவும் பாதிப்பாகவும் அமையும் என்பது உறுதி.

ஹைதராபாத்

ஹைதராபாத் அணி மும்பையைத் தோற்கடித்தால் அந்த அணி 14 புள்ளிகளைப் பெற்று விடும். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போட்டியிலிருந்து வெளியேறிவிடும். ஏனெனில் கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் வென்றாலும் அந்த அணியால் 13 புள்ளிகள் மட்டுமே மொத்தமாகப் பெற முடியும். 

ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால், அந்த அணி பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெற்றுவிடும். ஆர்சிபியுடனான கடைசி ஆட்டத்தில் அந்த அணி தோற்றாலும் நல்ல நெட் ரன் ரேட் உள்ளதால் 14 புள்ளிகளுடன் முன்னேறிவிடும். 

மும்பை, ஆர்சிபி என இரு அணிகளையும் தோற்கடித்தால் மட்டுமே முதல் இரு இடங்களில் ஓர் இடத்தைப் பிடிக்கும் ஹைதராபாத். ஆனால் அதற்கு தில்லி அணி தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் தோற்க வேண்டும். 

மும்பைக்கு எதிராகத் தோற்றால், ராஜஸ்தானுக்கு எதிராக வென்று பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் ஹைதராபாத். கொல்கத்தா தனது கடைசி இரு ஆட்டங்களையும் வென்றாலும் ஹைதராபாத்தால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறமுடியும். 

மும்பை இந்தியன்ஸ்

இன்றைய ஆட்டத்தில் இந்த  அணி வெற்றி பெற்றால் நல்ல ரன்ரேட் கைவசம் உள்ளதால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடும். முதல் இரு இடங்களைப் பிடிக்க இதர போட்டிகளின் முடிவுகள் சாதகமாக அமையவேண்டும்,

ஒருவேளை இந்த ஆட்டத்தில் தோற்றுப்போனால், அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வெல்லவேண்டும். 

மும்பை கடைசி 2 ஆட்டத்தில் தோற்றுப்போனால், கடைசி 2 ஆட்டங்களில் கொல்கத்தா வென்றால் மும்பைக்குச் சிக்கலாகிவிடும். நெட் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா முன்னேறிவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com