டி காக் அரைசதம்: மும்பை அணி 162 ரன்கள் குவிப்பு!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது. 
டி காக் அரைசதம்: மும்பை அணி 162 ரன்கள் குவிப்பு!


ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது. 

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

குயின்டன் டி காக் துரிதமாக ரன் குவிக்க திணறியதால் ரோஹித் சர்மா சற்று அதிரடியாக ரன் குவித்தார். இதனால், அந்த அணியின் ரன் ரேட் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்தது. இந்த நிலையில், அவர் 24 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் துரிதமாக ரன் சேர்த்து விளையாடினார். எனினும், முதல் 10 ஓவரில் டி காக் துரிதமாக ரன் சேர்க்கவில்லை. 

இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, எவின் லீவிஸும் வெறும் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், மும்பை அணி ரன் ரேட்டில் சற்று திணறியது.   

இதனால், ஹார்திக் பாண்டியா முன்னதாக களமிறக்கப்பட்டார். அவர் வந்த வேகத்தில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, பசில் தம்பி ஓவரில் ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடித்த டி காக் அரைசதத்தை எட்டினார். 

கடைசி கட்டத்தில் போலார்டும் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்து 10 ரன்னுக்கு ஆட்டமிழக்க மும்பை இன்னிங்ஸில் மிரட்டல் ஆட்டம் என்று சொல்லும்படியான ஃபினிஷிங் அமையவில்லை. கடைசி ஓவரில் க்ருணால் பாண்டியா ஒரு சிக்ஸர் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டி காக் 58 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.  

ஹைதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது நபி தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com