ஐபிஎல் பிளேஆஃப்: மீதி ஓர் இடம் எந்த அணிக்கு? நான்கு அணிகளும் என்ன செய்யவேண்டும்?

மீதமுள்ள ஓர் இடத்துக்கு ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன. பெங்களூர் அணி பிளேஆஃப்புக்கான போட்டியில் இல்லை...
ஐபிஎல் பிளேஆஃப்: மீதி ஓர் இடம் எந்த அணிக்கு? நான்கு அணிகளும் என்ன செய்யவேண்டும்?

நேற்று  நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது மும்பை அணி. புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்ற மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஹைதராபாத் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பிளேஆஃப்-பில் இடம்பெறக்கூடிய நான்கு அணிகளில் மூன்று அணிகள் உறுதிசெய்யப்பட்டுவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ்.

இந்நிலையில் மீதமுள்ள ஓர் இடத்துக்கு ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன. பெங்களூர் அணி பிளேஆஃப்புக்கான போட்டியில் இல்லை.

மீதமுள்ள ஆட்டங்கள்

வெள்ளி: பஞ்சாப் vs கொல்கத்தா
சனி: தில்லி vs ராஜஸ்தான் 
ஹைதராபாத் vs பெங்களூர் 
ஞாயிறு: சென்னை vs பஞ்சாப் 
மும்பை vs கொல்கத்தா

பிளேஆஃப் சாத்தியக்கூறுகள்


ராஜஸ்தான்: 11 புள்ளிகள்

தில்லியுடன் நாளை மோதுகிறது. வேறு வழியே இல்லை. இதில் ஜெயித்தால் மட்டுமே மிஞ்சியுள்ள ஒரு வாய்ப்பையும் பெறமுடியும். ஜெயித்தாலும் 13 புள்ளிகள் என்பதால் இதர அணிகளின் வெற்றி, தோல்வியில்தான் ராஜஸ்தானுக்கு அதிர்ஷ்டம் கிட்டும். 

பஞ்சாப்புக்கும் கொல்கத்தாவுக்கும் மீதம் இரு ஆட்டங்கள் இருந்தாலும் அவர்கள் இருவருமே அதில் ஒன்றில் மட்டுமே ஜெயிக்கவேண்டும். அதுமட்டும் போதாது, பெரும்பாலான அணிகளின் விருப்பமான பெங்களூரிடம் ஹைதராபாத் தோற்கவேண்டும். இவையெல்லாம் நடைபெற்றால் ராஜஸ்தான் பிளேஆஃப்புக்குச் சென்றுவிடும். ஆனால் இத்தனையும் ஓர் அணிக்குச் சாதகமாக அமையுமா?

கொல்கத்தா: 10 புள்ளிகள்

பஞ்சாப், மும்பைக்கு எதிரான இரு ஆட்டங்களையும் வெல்லவேண்டும். அது மட்டும் நடந்தால் போதாது. குறுக்கே நிற்கும் ஹைதராபாத்தை ஆர்சிபி வீழ்த்தவேண்டும். இவை நடைபெற்றால் கொல்கத்தா பிளேஆஃப்புக்குச் சென்றுவிடும். ரஸ்ஸலின் உழைப்புக்கும் பலன் கிடைத்ததுபோல இருக்கும். இதிலிருந்து தெரியவருவது - இன்று நடைபெறவுள்ள பஞ்சாப் vs கொல்கத்தா இடையிலான ஆட்டம் நாக் அவுட். இதில் தோற்கும் அணி போட்டியிலிருந்து வெளியேறிவிடும். 

பஞ்சாப்: 10 புள்ளிகள்

கொல்கத்தாவுக்குச் சொன்னதே தான் பஞ்சாப்புக்கும். முதலில் கொல்கத்தா, சென்னை அணிகளை பஞ்சாப் வெல்லவேண்டும். அடுத்ததாக ஹைதராபாத்தை ஆர்சிபி வீழ்த்தவேண்டும்.  இவை நடைபெற்றால் பஞ்சாப் பிளேஆஃப்புக்குச் சென்றுவிடும். கடந்த வருடம் போல ஆரம்பத்தில் கடகடவென ஜெயித்து பிறகு சுருண்டு விழுந்தது போன்ற ஒரு நிலைமை இந்த வருடமும் ஏற்படாது. அஸ்வினின் கேப்டன் பதவியும் தப்பிக்கும். ஒருவேளை இன்று கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றால் வெளியேறிவிடவேண்டியதுதான். ஏனெனில் கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் கடைசி இரு ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் வென்று 12 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குச் செல்லமுடியும் என எண்ணமுடியாது. ஹைதராபாத் அருமையான ரன் ரேட்டில் உள்ளதால் 12 புள்ளிகளுடன் எத்தனை அணிகள் வரிசையில் நின்றாலும் அது தான் முன்னேறும். 

ஹைதராபாத்: 12 புள்ளிகள் 

வார்னர் புண்ணியத்தில் நல்ல ரன்ரேட் வைத்திருப்பதால், அனைத்து அணிகளின் எதிர்பார்ப்பை வீழ்த்தி ஆர்சிபி அணியைத் தோற்கடித்தால் போதும். பிளேஆஃப் உறுதியாகிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com