சிஎஸ்கே ரசிகர்களால் 2012-ம் வருட கடைசி லீக் ஆட்டத்தை மறக்க முடியுமா?

2012-ம் வருடம் தவிர மற்ற எல்லா வருடங்களிலும் கடைசி ஆட்டத்துக்கு முன்பே பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது...
சிஎஸ்கே ரசிகர்களால் 2012-ம் வருட கடைசி லீக் ஆட்டத்தை மறக்க முடியுமா?

லீக் சுற்று ஆட்டங்களில் கடைசி ஆட்டம் ஒவ்வொரு அணிக்கும் மிகமுக்கியமானது. பலமுறை பல அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் வென்றுதான் பிளேஆஃப்புக்குத் தகுதியடைந்துள்ளன.

நேற்று கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு எதிராகத் தோற்றதால் சிஎஸ்கே அணிக்குப் பெரிய ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் 2012-ம் வருடம், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏற்பட்ட பதற்றத்தை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. 

2012-ம் வருடம் மட்டும் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றபிறகும் அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் பிளேஆஃப்புக்கு தகுதியடைந்தது சிஎஸ்கே. அப்போது, 3 முடிவுகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே சிஎஸ்கேவால் பிளேஆஃப்புக்குச் செல்லமுடியும் என்கிற நிலை இருந்தது. சென்னை அணி

வியாழன் அன்று நடைபெற்ற அதன் கடைசி ஆட்டத்தில் தோற்றது. அடுத்த மூன்று நாள்களில் டெக்கான் சார்ஜர்ஸ் - ராஜஸ்தான், பெங்களூர் அணிகளையும் தில்லி அணி பஞ்சாப்பையும் தோற்கடித்தால் மட்டுமே பிளேஆஃப்பில் சிஎஸ்கே நுழையமுடியும் என்கிற இக்கட்டான நிலைமை. ஆனால் அப்படியே நடக்கும் என சென்னை ரசிகர்கள் எண்ணியிருக்கவே மாட்டார்கள்.

வெள்ளியன்று ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கானும் சனியன்று பஞ்சாப்பை தில்லி 6 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தின. அப்போதுகூட சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. ஞாயிறன்று பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஆட்டத்தில் வென்றால் பிளேஆஃப் உறுதி என்கிற நிலையில் ஆடிய பெங்களூர் 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது. சென்னையும் பெங்களூரும் தலா 17 புள்ளிகள் பெற்றாலும் நெட்ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே நம்பமுடியாத வகையில் பிளேஆஃப்புக்குத் தகுதியடைந்தது. இதன்பிறகு சென்னையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது சிஎஸ்கே.

சிஎஸ்கேவுக்கு இந்தளவுக்கு உதவிய டெக்கான் சார்ஜர்ஸ், அந்த வருடம் 16 ஆட்டங்களில் 4-ல் மட்டுமே வெற்றியடைந்து 7-ம் இடத்தைப் பிடித்தது.

2012 புள்ளிகள் பட்டியல்

சாம்பியன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை
கடைசி இரு இடங்கள்: ஹைதராபாத், புணே (கடைசி இடம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com