தொடர் தோல்விகளின்போது கேகேஆர் அணிக்குள் பதற்றம் நிலவியது: உதவிப் பயிற்சியாளர் ஒப்புதல்!

தொடர் தோல்விகளின்போது அணிக்குள் பதற்றம் நிலவியதை மறுக்க முடியாது. ஓர் அணியாக நாங்கள் இதைச் சரிசெய்யவேண்டும்...
தொடர் தோல்விகளின்போது கேகேஆர் அணிக்குள் பதற்றம் நிலவியது: உதவிப் பயிற்சியாளர் ஒப்புதல்!

ஐபிஎல் போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு வந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது மும்பை. இதைத்தொடர்ந்து, முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை, 16.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா அரை சதம் (55 ரன்கள்) பதிவு செய்தார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் 5 ஆட்டங்களில் நான்கில் வெற்றியடைந்தது கேகேஆர். பிறகு தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. பிறகு அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் வென்றது. எனினும் நேற்றைய ஆட்டத்தில் தோற்றுப்போனதால் பிளேஆஃப் ஆட்டங்களில் தகுதி பெறாமல் போய்விட்டது.

இந்நிலையில் ஆட்டத்துக்குப் பிறகு கேகேஆர் அணியின் உதவிப் பயிற்சியாளர் சைமன் கடிச் கூறியதாவது:

தொடர் தோல்விகளின்போது அணிக்குள் பதற்றம் நிலவியதை மறுக்க முடியாது. ஓர் அணியாக நாங்கள் இதைச் சரிசெய்யவேண்டும். இது ஓர் வெற்றிகரமான அணி. இதில் நீண்ட நாள் பங்காற்ற அனைவரும் கடுமையாக உழைக்கிறோம். 

இந்த வருடம் மிக நன்றாக ஆரம்பித்தோம். ஆனால் போட்டியின் நடுவில் நாங்கள் மோசமாக விளையாடினோம். ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான தோல்விகளைத் தவிர்த்திருக்க வேண்டும். நாங்கள் இந்தமுறை சரியாக விளையாடாவிட்டாலும் அந்த இரண்டு தோல்விகள் எங்களைக் கடைசியில் சேதாரத்தை உண்டுபண்ணிவிட்டது. எங்களுக்குச் சாதகமான, பேட்டிங்குக்கு உகந்த கொல்கத்தா ஆடுகளத்தில் வெல்லாமல் போனதும் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com