யார் பந்துவீசுகிறார் என்று பார்க்க மாட்டேன்: ரிஷப் பந்த்

டி20 ஆட்டங்களில், 20 பந்துகளில் 40 ரன்கள் தேவை என்றால் நீங்கள் ஒரு பந்துவீச்சாளரின் பந்துகளைத் தாக்கத் தயாராக இருக்கவேண்டும்...
யார் பந்துவீசுகிறார் என்று பார்க்க மாட்டேன்: ரிஷப் பந்த்

பரபரப்பான கடைசி ஓவரில் ஹைதராபாத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று த்ரில் வெற்றி பெற்றது தில்லி. பிருத்வி ஷா 56, ரிஷப் பந்த் 49 ஆகியோர் வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியால் குவாலிபையர் 2 ஆட்டத்தில் சென்னையுடன் மோதுகிறது தில்லி.

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் ஒரு பகுதியாக தில்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையிலான எலிமினேட்டர் ஆட்டம் (வெளியேறும் சுற்று) விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடைபெற்றது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது ஹைதராபாத்.

163 ரன்கள் வெற்றி இலக்குடன் தில்லி தரப்பில் களமிறங்கிய ஷிகர் தவன்-பிருத்வி ஷா ஆகியோர் தொடக்கம் முதலே அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 56 ரன்களை விளாசிய பிருத்வி ஷா, கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரிஷப் பந்தின் வான வேடிக்கை தொடர்ந்தது. பசில் தம்பி வீசிய 18-வது ஓவரில் 21 ரன்களை விளாசினார்.  வெற்றிக்கு மிக அருகில் அழைத்து வந்த ரிஷப் பந்த் 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 49 ரன்களை எடுத்து புவனேஸ்வர் பந்தில் ஆட்டமிழந்தார். 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது தில்லி. வெள்ளிக்கிழமை நடைபெறும் குவாலிபையர்-2 ஆட்டத்தில் தில்லி - சென்னை அணிகள் மோதுகின்றன.

தன்னுடைய ஆட்டம் குறித்து ரிஷப் பந்த் கூறியதாவது:

டி20 ஆட்டங்களில், 20 பந்துகளில் 40 ரன்கள் தேவை என்றால் நீங்கள் ஒரு பந்துவீச்சாளரின் பந்துகளைத் தாக்கத் தயாராக இருக்கவேண்டும். யார் பந்துவீசுகிறார் என நான் பார்க்கமாட்டேன். இன்று நான் கடினமான ஷாட்டை அடித்தாடவேண்டும் என முயலவில்லை. பந்துகளை நன்குக் கவனித்து டைமிங் சரியாக இருக்கும்படிப் பார்த்துக்கொண்டேன். 

இதுபோன்ற ஆடுகளத்தில் நீங்கள் நிலைத்து நின்றால், கடைசிவரை ஆட்டமிழக்காமல் உங்கள் அணிக்கு வெற்றியைத் தேடித்தரவேண்டும். நான் அருகில் வரை சென்றுவிட்டேன். அடுத்தமுறை என் அணிக்காகக் கடைசிவரை நின்று ஆடுவேன். நான் எதிர்மறை எண்ணங்களுடன் விளையாடவில்லை. அது ஆட்டத்துக்கு உதவாது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com