சுடச்சுட

  

  மீண்டு வந்த ஆஃப் ஸ்பின்னர்கள்: அசத்திய அஸ்வின், ஹர்பஜன், ஜடேஜா!

  By எழில்  |   Published on : 10th May 2019 04:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ashwin_win1

   

  சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் லெக் ஸ்பின்னர்களுக்கே அதிக மதிப்பு. உலகக் கோப்பைப் போட்டிக்கான தேர்வில் குல்தீப் யாதவ், சாஹல் போன்ற மணிக்கட்டுச் சுழற்பந்துவீச்சாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

  ஆனால் இந்த ஐபிஎல்-லில் அஸ்வின், ஹர்பஜன், ஜடேஜா போன்ற விரல் சுழற்பந்துவீச்சாளர்கள் அசத்தியுள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் குல்தீப், சாஹலை விடவும் இந்த மூவரும் அற்புதமாகப் பந்துவீசியுள்ளார்கள்.

  ஆனால் அஸ்வின், ஹர்பஜன், ஜடேஜா ஆகிய மூவருக்கும் கடந்த வருட ஐபிஎல் நல்லவிதமாக அமையவில்லை. அதனால் அஸ்வினுக்கு உலகக் கோப்பை வாய்ப்பு அமையவில்லை. ஹர்பஜனால் இந்திய அணிக்குள் மீண்டும் நுழைய முடியவில்லை. ஜடேஜா இந்திய அணிக்குள் நுழைய மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. ஆனால் இந்த வருடம் மூவருக்குமே அற்புதமாக அமைந்துள்ளது. அதற்கான ஆதாரம்: 

  2018                                                                            2019

   விக்கெட்டுகள்  எகானமி   வீரர்கள்                               விக்கெட்டுகள்  எகானமி 
   10  8.09  அஸ்வின்      15  7.27
   7  8.48  ஹர்பஜன்     13  7.15
   11  7.39  ஜடேஜா        13  6.44

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai