சுடச்சுட

  

  மும்பையும் - சென்னையும்! இறுதிப்போட்டியும் - முதல்பேட்டிங்கும்!

  By Raghavendran  |   Published on : 13th May 2019 04:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  MI_champions

   

  ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் என்றாலே பரபரப்புக்கு சற்றும் பஞ்சமிருக்காது. அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களில் இரு அணிகளின் ரசிகர்களும் சற்றும் சளைக்காமல் தங்கள் அணிகளின் பெருமைகளை தொடர்ந்து பதிவிடுவதும், அதற்கு எதிர்தரப்பு பதிலடி அளிப்பதுமாக இருக்கும். 

  இந்நிலையில், இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை இறுதிப்போட்டியில் மோதியுள்ளன. அதிலும் 4-ஆவது முறையாக யார் கோப்பையை வெல்வார் என்று பெரும் பரபரப்புக்கு இடையே 2019 இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. 

  அதுமட்டுமல்லாமல், 4 முறை இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்தாலும், 2010-ஆம் ஆண்டு மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. 2013, 2015, 2019 ஆகிய 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றிபெற்றுள்ளது.

  இந்நிலையில், இந்த 4 இறுதி ஆட்டங்களின் போதும் ஒரு ஒற்றுமை மட்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அது, இறுதிப்போட்டியில் முதல் பேட்டிங் செய்யும் அணியே வெற்றிபெற்றதாகும். 

  2010-ஆம் ஆண்டு டாஸ் வென்று முதல் பேட்டிங் தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

  2013-ஆம் ஆண்டு டாஸ் வென்று முதல் பேட்டிங் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ், 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

  2015-ஆம் ஆண்டு டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி கோப்பையை நழுவவிட்டது.

  2019-ஆம் ஆண்டு டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ், 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று மீண்டும் கோப்பையை கைப்பற்றியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai