1 பந்தில் 2 ரன்கள் தேவை.. அதே ஷர்துல் தாக்குர்.. அன்று பார்த்தீவ் படேல் இன்று மலிங்கா

நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கடைசி பந்தில் 2 ரன்களை தேவை என்ற நிலையில் ஷர்துல் தாக்குர் இரண்டு முறையும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 
நன்றி: ஐபிஎல்டி20.காம்
நன்றி: ஐபிஎல்டி20.காம்

நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கடைசி பந்தில் 2 ரன்களை தேவை என்ற நிலையில் ஷர்துல் தாக்குர் இரண்டு முறையும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

ஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பாக நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. 

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், மும்பை அணி 1 ரன்னில் வெற்றி பெற்று 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. 

இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ஸ்டிரைக்கில் இருந்த ஷர்துல் தாக்குர் மலிங்காவின் ஸ்லோ பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால், சென்னை அணி 1 ரன்னில் தோல்வியடைந்தது. 

ஆனால் இது முதன்முறையல்ல. 

லீக் சுற்றில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் இதே போன்ற நிலை ஏற்பட்டது. 39-வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. 

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்து 1 ரன்னில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 5 பந்தில் தோனி 24 ரன்கள் அடித்து மிரட்ட கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. 

ஸ்டிரைக்கில் தோனி இருந்தார். மறுமுனையில் ஷர்துல் தாக்குல் இருந்தார். முதல் 5 பந்தில் 24 ரன்கள் எடுத்த தோனி கடைசி பந்தை தவறவிட்டார். எனினும், தோனியும் ஷர்துல் தாக்குரும் ரன் ஓடினர். ஆனால், பார்த்தீவ் படேலின் சூப்பர் த்ரோவால் ஷர்துல் தாக்குர் நூலிழையில் ரன் அவுட் ஆனார். இதனால், சென்னை அணி இந்த போட்டியிலும் 1 ரன்னில் தோல்வியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com