சுடச்சுட

  

  அடுத்த சீசனில் பார்க்கலாமா? சஞ்சய் மஞ்சுரேக்கர் கேள்விக்கு தோனி பதில் இதுதான்!

  By Raghavendran  |   Published on : 13th May 2019 01:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dhoni

   

  2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 

  மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இதன்பின்னர் சஞ்சய் மஞ்சுரேக்கர் எழுப்பிய கேள்விகளுக்கு மகேந்திர சிங் தோனி பதிலளித்ததாவது:

  ஒரு அணியாக இந்த சீசன் எங்களுக்கு சிறப்பானதாகவே அமைந்தது. இருந்தாலும் இறுதி ஆட்டம் வரை கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. ஏனென்றால் இதுவரை நடந்த சீசன்களின் அடிப்படையில் இம்முறையும் அத்தனை சிறப்புடன் விளையாடி தான் இறுதி ஆட்டம் வரை முன்னேறியுள்ளோமா என்பதை ஆராய வேண்டும்.

  இந்த சீசனில் நிறைய சாதித்திருக்க முடியும், குறிப்பாக நடுவரிசை ஆட்டம் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. இருந்தாலும் இந்த சீசன் முழுவதும் அதை ஓரளவு சமாளித்து வந்துள்ளோம். பந்துவீச்சு திருப்தியளிக்கக் கூடிய வகையிலேயே இருந்தது. தோல்வி கடினமாகத் தான் இருக்கும். இருந்தாலும் இந்த ஆட்டத்தில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் தோற்ற அணியை விட குறைந்தபட்சம் ஒரு தவறாவது குறைந்து செய்திருந்தால் மட்டும் தான் ஒரு அணியால் வெற்றிபெற்றிருக்க முடியும்.

  எப்படி இருந்தாலும், இந்த இறுதி ஆட்டம் மிகவும் சிறப்பானதாகவே அமைந்தது. கடைசி பந்து வரை மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது. அடுத்த சீசனில் களமிறங்குவதற்கு முன்பு, இந்த சீசனில் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

  அடுத்த சீசனிலும் நிச்சயம் என்னை எதிர்பார்க்கலாம், அதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai