களத்தில் வீராப்பு காட்டிய பொல்லார்டுக்கு 25 சதவீத அபராதம் விதிப்பு

ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது திடீரென ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக மும்பை இந்தியன்ஸ் வீரர் பொல்லார்டு களத்தில் வீராப்பு காட்டியதால் நடுவர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். 
களத்தில் வீராப்பு காட்டிய பொல்லார்டுக்கு 25 சதவீத அபராதம் விதிப்பு

ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது திடீரென ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக மும்பை இந்தியன்ஸ் வீரர் பொல்லார்டு களத்தில் வீராப்பு காட்டியதால் நடுவர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். 

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 

மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கின் போது 20-ஆவது ஓவரை சென்னையின் டுவைன் பிராவோ வீசினார். பொல்லார்டு பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது நிர்ணயிக்கப்பட்ட பகுதியை விட பந்து தூரமாக வீசப்பட்டது. அப்போது பொல்லார்டும் வழக்கமான வகையில் இல்லாமல் சற்று தள்ளி நின்றிருந்தார். இதனால் அந்த பந்து வைட் இல்லை என்று களநடுவர் அறிவித்தார்.

அப்போது கோபமடைந்த பொல்லார்டு, தனது பேட்டை மேலே வீசினார். மேலும் அடுத்த பந்தில் இன்னும் சற்று தள்ளி நின்று பேட் செய்தார். பிராவோ வீசும் போது மேலும் விலகிச் சென்றார். இதுபோன்ற சம்பவங்களால் அங்கிருந்த கள நடுவர்கள் பொல்லார்டை எச்சரித்தனர். போட்டி நடுவரிடமும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், 2.8 ஐபிஎல் விதிகளின்படி லெவல் 1 தவறின் அடிப்படையில் போட்டி ஊதியத்தில் இருந்து பொல்லார்டுக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 

சர்ச்சைகளுக்குப் பெயர் போன பொல்லார்டு, ஏற்கனவே நடைபெற்ற ஐபிஎல் தொடர்களிலும் இதுபோன்று தவறாக நடந்துகொண்ட பல சம்பவங்கள் உள்ளன.

ஒருமுறை ஆர்சிபி-க்கு எதிரான போட்டியின் போது ஆஸி. வீரர் மிட்செல் ஸ்டார்க் பந்தை மேலே வீசிய போது பதிலுக்க பொல்லார்டு தனது பேட்டை ஸ்டார்க் இருக்கும் திசையில் தூக்கி வீசியது நினைவுகூரத்தக்கது. அதுபோன்று இதர வீரர்களுடனும் சர்ச்சையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com