சுடச்சுட

  
  watson_bleed_during_final

   

  2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. 

  சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் தனியொருவனாகப் போராடிய ஷேன் வாட்சன், 59 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் விளாசினார். 

  இந்நிலையில், காலில் ஏற்பட்ட காயத்துடன் ஷேன் வாட்சன் ஆடியதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்தார். அதில், வாட்சனின் கால் பகுதியில் மிகப்பெரிய அளவிலான ரத்தக்கசிவு இருப்பது பதிவாகியுள்ளது.

  தன்னுடைய காயத்தையும் மறைத்து அணிக்காக வாட்சன் போராடியதாகவும், போட்டிக்கு பிறகு அவரது காலில் 6 தையல்கள் வரை போடப்பட்டதாகவும் ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டினார். 

  தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் 'நீ'ங்க வேற லெவல்! வீ லவ் யூ வாட்சன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வாட்சனை கொண்டாடி வருகின்றனர். 

  அதுமட்டுமல்லாமல் வாட்சனின் அர்ப்பணிப்பு தான் நமக்கு கிடைத்த மகுடம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பாராட்டியுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai