சுடச்சுட

  

  '3000- உங்களுக்காக தல'- அயர்ன் மேன் வசனத்தை நினைவுகூர்ந்த சிஎஸ்கே

  By Raghavendran  |   Published on : 14th May 2019 01:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dhoni

   

  நடப்பு சாம்யினாக 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அடியெடுத்து வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ், 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது. 

  12-ஆவது சீசன் ஐபிஎல் தொடரை ஹாட்ரிக் வெற்றியுடன் தொடங்கியிருந்தாலும், பின்னர் வந்த போட்டிகளில் சரிவை சந்தித்து. குறிப்பாக கேப்டன் தோனி விளையாடாத போட்டிகளில் தோல்வியடைந்தது. இதனால் தொடரின் பிற்பாதியில் வெற்றியும், தோல்வியும் கலந்தே இருந்தது.

  மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்ட்ட வாட்சன், ரெய்னா, ராயுடு, கேதர் ஜாதவ், பிராவோ போன்ற முன்னணி வீரர்கள் வேகமாக ரன் குவிக்க தடுமாறியதாலும், பேட்டிங்கின் மொத்த சுமையும் கேப்டன் தோனியின் மீது விழுந்தது. இதனிடையே தோனியின் உடல்தகுதியிலும் பிரச்னைகள் ஏற்பட்டது.

  இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் நடப்பு சீசனின் பெரும்பாலான ஆட்டங்களில் மகேந்திர சிங் தோனி மட்டுமே தனியொருவனாகப் போராடினார். இருப்பினும் இறுதிப்போட்டியில் எதிர்பாராவிதமாக மிகவும் சர்ச்சைக்குள்ளான ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதுவே அந்த ஆட்டத்தின் போக்கை மாற்றியதாக சச்சினே பின்னர் குறிப்பிட்டார்.

  அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் வரும் காட்சிகளில் டோனி ஸ்டார்க் எனும் அயர்ன் மேன், தனது மகளிடம் 'ஐ லவ் யூ 3000' என்று இறுதி வரை கூறிக்கொண்டிருப்பார். இது அந்த திரைப்படத்தின் முக்கிய சம்பவங்களைக் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.

  பெரும் வரவேற்பை பெற்ற இந்த வசனத்தைப் பயன்படுத்தி We #Yellove you, 3000! #ForEverything #Thala #WhistlePodu

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai