பவர்பிளேயில் அசத்திய ஆர்ச்சர்: ஒத்துழைப்பு அளிக்காத இதர ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்

ஆல்ரவுண்டர் ஆர்ச்சர், பவர்பிளே பகுதியில் சிறப்பாகப் பந்துவீசி அசத்தியுள்ளார்.
பவர்பிளேயில் அசத்திய ஆர்ச்சர்: ஒத்துழைப்பு அளிக்காத இதர ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்

ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறியுள்ள ராஜஸ்தான் அணியில் ஆல்ரவுண்டர் ஆர்ச்சர், பவர்பிளே பகுதியில் சிறப்பாகப் பந்துவீசி அசத்தியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களே எடுத்தது. கொல்கத்தா வீரா் பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த வெற்றி, கொல்கத்தாவின் பிளே-ஆஃப் வாய்ப்புக்கு நூலளவு நம்பிக்கையை அளித்துள்ளது. தோல்வியடைந்த ராஜஸ்தான் போட்டியிலிருந்து வெளியேறியது.

ராஜஸ்தான் அணியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆர்ச்சர் சிறப்பாகப் பந்துவீசியும் இதர பந்துவீச்சாளர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் ராஜஸ்தான் அணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பவர்பிளேயில் ஆர்ச்சரின் பங்களிப்பு மகத்தானதாக உள்ளது. அவருடைய பங்களிப்புக்கும் இதர பந்துவீச்சாளர்களுக்கும் தொடர்பு இல்லாத அளவுக்கு ஆர்ச்சர் மிகச்சிறப்பாகப் பந்துவீசி அசத்தியுள்ளார்.

14 ஆட்டத்தில் விளையாடி 20 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் ஆர்ச்சர். எகானமி - 6.55. ராஜஸ்தான் அணியில் அடுத்த இடத்தில் உள்ள பந்துவீச்சாளர் ராகுல் தேவாதியா - 10 விக்கெட்டுகள். 

பவர்பிளேயில் ஆர்ச்சர்

விக்கெட்டுகள் - 10
எகானமி - 4.34
சராசரி - 11.30

பவர்பிளேயில் இதர ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்

விக்கெட்டுகள் - 5
எகானமி - 9.33
சராசரி - 115.20

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com