கொடுத்துவைத்த சன்ரைசர்ஸ் அணி: 2014 முதல் 500 ரன்களுக்குக் குறையாமல் எடுக்கும் வார்னர்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு ரூ. 12.50 கோடி சம்பளம் வழங்குகிறது.
கொடுத்துவைத்த சன்ரைசர்ஸ் அணி: 2014 முதல் 500 ரன்களுக்குக் குறையாமல் எடுக்கும் வார்னர்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு ரூ. 12.50 கோடி சம்பளம் வழங்குகிறது.

அதிகச் சம்பளம் பெறும் வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் பின்னால் தான் உள்ளார். விராட் கோலி, பேட் கம்மின்ஸ், தோனி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் என ரூ. 15 கோடிக்கும் அதிகமாகச் சம்பளம் வாங்குபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். 

ஆனால் வேறு யாரை விடவும் அதிகப் பங்களிப்பு செலுத்தி, தனது அணிக்குப் பெரிய பலமாக உள்ளார் டேவிட் வார்னர். இப்படியொரு வீரர் கிடைத்ததற்காக சன்ரைசர்ஸ் அணி உண்மையிலேயே கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

2014 முதல் ஆறு வருடங்களாக ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் 500 ரன்களுக்குக் குறையாமல் எடுத்திருக்கும் ஒரே வீரர் டேவிட் வார்னர் தான். 

2014 முதல் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் வார்னருக்குத்தான். 3800 ரன்கள். இத்தனைக்கும் தடை விதிக்கப்பட்டதன் காரணமாக 2018 ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்கவே இல்லை. அப்படியும் அவரைத் தாண்டிச் செல்ல எந்தவொரு பேட்ஸ்மேனாலும் முடியவில்லை.

ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

ஷாா்ஜாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி 17.1 ஓவா்களில் 151 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வாா்னா் - ரித்திமான் சாஹா கூட்டணி அதிரடி காட்டியது. வார்னர் 85, சாஹா 58 ரன்கள் எடுத்தார்கள். இதன்மூலம் இந்த வருடமும் 500 ரன்களைக் கடந்துள்ளார் வார்னர். 

2014 முதல் ஐபிஎல் போட்டியில் வார்னர்

2014 - 528 ரன்கள்
2015 - 562 ரன்கள்
2016 - 848 ரன்கள்
2017 - 641 ரன்கள்
2018 - பங்கேற்கவில்லை
2019 - 692 ரன்கள்
2020 - 529* ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com