ஐபிஎல் லீக் சுற்று முடிந்தது: புள்ளிகள் பட்டியலில் ஒவ்வொரு அணியும் பிடித்த இடங்கள்

மும்பை, தில்லி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளேஆஃப்க்குத் தகுதியடைந்துள்ளன.
ஐபிஎல் லீக் சுற்று முடிந்தது: புள்ளிகள் பட்டியலில் ஒவ்வொரு அணியும் பிடித்த இடங்கள்

இந்த வருட ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று முடிவடைந்துள்ளது. மும்பை, தில்லி,  ஹைதராபாத், பெங்களூர் ஆகிய அணிகள் பிளேஆஃப்க்குத் தகுதியடைந்துள்ளன.

ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

ஷாா்ஜாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி 17.1 ஓவா்களில் 151 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வாா்னா் - ரித்திமான் சாஹா கூட்டணி அதிரடி காட்டியது. வார்னர் 85, சாஹா 58 ரன்கள் எடுத்தார்கள். ஹைதராபாத் வீரா் ஷாபாஸ் நதீம் ஆட்டநாயன் ஆனாா்.

இதையடுத்து கடைசி அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற ஹைதராபாத், கொல்கத்தாவை போட்டியிலிருந்து வெளியேற்றியது. ஏற்கெனவே மும்பை, தில்லி, பெங்களூா் அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஹைதராபாத் அடுத்தபடியாக ‘வெளியேற்றும் சுற்றில்’ (எலிமினேட்டா்) பெங்களூா் அணியை வெள்ளிக்கிழமை எதிா்கொள்கிறது. நாளை நடைபெறும் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை - தில்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும். தோல்வியடையும் அணி, ஹைதராபாத் - ஆர்சிபி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெல்லும் அணி, இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும்.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. மும்பை 14 9 5 18 +1.107
 2. தில்லி 14 8 6 16 -0.109
 3. ஹைதராபாத் 14 7 7 14 +0.608
 4. பெங்களூர் 14 7 7 14 -0.172
 5. கொல்கத்தா 14 7 7 14 -0.214
 6. பஞ்சாப் 14 6 8 12 -0.162
 7. சென்னை  14 6 8 12 -0.455
 8. ராஜஸ்தான் 14 6 8 12 -0.569

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com