ஐபிஎல் 2020 போட்டியில் அதிக சிக்ஸர்கள்: அசத்தியுள்ள இளம் வீரர்!

22 வயது மும்பை வீரர் இஷான் கிஷன் 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார். 
ஐபிஎல் 2020 போட்டியில் அதிக சிக்ஸர்கள்: அசத்தியுள்ள இளம் வீரர்!

ஐபிஎல் 2020 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள வீரர்களின் பட்டியலில் மும்பை வீரர் இஷான் கிஷன் முதலிடம் பிடித்துள்ளார். 

ஐபிஎல் போட்டியின் தகுதிச்சுற்று (குவாலிஃபயர் 1) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி, இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. 

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தில்லி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுத்தது. மும்பை பந்துவீச்சாளர் பும்ரா ஆட்டநாயகன் ஆனார். 

இந்த ஆட்டத்தில் 22 வயது மும்பை வீரர் இஷான் கிஷன் 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து ஐபிஎல் 2020 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை 29 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

ஐபிஎல் 2020 போட்டியில் அதிக சிக்ஸர்கள்

இஷான் கிஷன் - 29 சிக்ஸர்கள்
சஞ்சு சாம்சன் - 26 சிக்ஸர்கள்
பாண்டியா - 25 சிக்ஸர்கள்
பூரன் - 25 சிக்ஸர்கள்
மார்கன் - 24 சிக்ஸர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com