இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது மும்பை இண்டியன்ஸ் 

ஐபிஎல் போட்டியின் தகுதிச்சுற்று (குவாலிஃபயர் 1) ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ûஸ வீழ்த்தி, முதல் அணியாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. 
இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது மும்பை இண்டியன்ஸ் 

துபை: ஐபிஎல் போட்டியின் தகுதிச்சுற்று (குவாலிஃபயர் 1) ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ûஸ வீழ்த்தி, முதல் அணியாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. 
மும்பை இறுதிச்சுற்றுக்கு வருவது இது 6-ஆவது முறையாகும். மறுபுறம், தோல்வியைத் தழுவிய டெல்லி இறுதிச்சுற்றுக்கு வர மேலும் ஓர் வாய்ப்பு உள்ளது. "வெளியேற்றும்' சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதி வெல்லும் பட்சத்தில் டெல்லிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். 
துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுத்தது. மும்பை பெüலர் ஜஸ்பிரீத் பும்ரா ஆட்டநாயகன் ஆனார். 
இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. மும்பை அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, டிரென்ட் போல்ட், ஹார்திக் பாண்டியா சேர்க்கப்பட்டு, தவல் குல்கர்னி, ஜேம்ஸ் பட்டின்சன், செüரவ் திவாரிக்கு ஓய்வளிக்கப்பட்டது. 
டாஸ் வென்ற டெல்லி பெüலிங் வீசத் தீர்மானித்தது. டி காக்குடன் இணைந்து மும்பையின் பேட்டிங்கை தொடங்கிய கேப்டன் ரோஹித் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களம்  புகுந்தார். 
டி காக் - சூர்யகுமார் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 40 ரன்கள் சேர்த்த டி காக் 8-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த இஷான் கிஷண் பந்தை பவுண்டரி, சிக்ஸராக பறக்கவிட மும்பையின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 
அரைசதம் கடந்த சூர்யகுமார் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கிரன் பொல்லார்ட் டக் அவுட்டானார். பின்னர் கிருணால் பாண்டியா ஆட வர, 
மறுமுனையில் இஷான் கிஷண் அரைசதம் கடந்தார். 
1 சிக்ஸர் உள்பட 13 ரன்களுடன் கிருணால் பாண்டியா கடைசி விக்கெட்டாக வெளியேறினார். பின்னர் ஹார்திக் பாண்டியா களம் கண்டு அதிரடி காட்டினார். ஓவர்கள் முடிவில் இஷான் கிஷண் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 55, ஹார்திக் பாண்டியா 5 சிக்ஸர்கள் உள்பட 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி தரப்பில் அஸ்வின் 3, நார்ட்ஜே, ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 
பின்னர் 201 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ûஸ தொடங்கிய டெல்லியில் 1 ரன் கூட எடுக்காமல் பிருத்வி ஷா, ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே ஆகியோர் டக் அவுட்டாகினர். 
அணியின் ரன் கணக்கை தொடங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 3 பவுண்டரிகள் மட்டும் விளாசி விக்கெட்டை இழந்தார். எனினும் 5-ஆவது வீராக வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் தனியொரு நபராக ரன்களை சேர்க்கப் போராடி அரைசதமும் கடந்தார். 
மறுமுனையில் ரிஷப் பண்ட் 3 ரன்களுக்கு வெளியேறிய பிறகு வந்த அக்ஸர் படேல் சிறிது நிலைத்தார். இந்நிலையில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 65 ரன்கள் சேர்த்திருந்த ஸ்டாய்னிஸ் 16-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். அவரை அடுத்து வந்த டேனியல் சாம்ஸ் டக் அவுட்டாக, கடைசி விக்கெட்டாக அக்ஸர் படேல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 42 ரன்களுக்கு வீழ்ந்தார். 
ஓவர்கள் முடிவில் ரபாடா 2 பவுண்டரிகள் உள்பட 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் பும்ரா 4, போல்ட் 2, கிருணால், பொல்லார்ட் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 


இரங்கல்


டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் மோஹித் சர்மாவின் தந்தை காலமானதை அடுத்து, அவர் போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பினார். மோஹித் சர்மாதந்தை இழப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெல்லி வீரர்கள் மும்பைக்கு எதிரான ஆட்டத்தின்போது கைகளில் கருப்பு ரிப்பன் அணிந்து விளையாடினர். 
இந்த சீசனில் டெல்லி அணிக்காக ஓர் ஆட்டத்தில் மட்டுமே விளையாடிய மோஹித் சர்மா அதில் ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார். 

சுருக்கமான ஸ்கோர்

மும்பை 200/5 
இஷான் கிஷண்     55* (30) 
சூர்யகுமார் யாதவ்     51 (38) 
குவிண்டன் டி காக்    40 (28)  
 
பந்துவீச்சு 

ரவிச்சந்திரன் அஸ்வின்     3/29 
மார்கஸ் ஸ்டாய்னிஸ்    1/5 

டெல்லி 143/8 

மார்கஸ் ஸ்டாய்னிஸ்     65 (46) 
அக்ஸர் படேல்    42 (33)  

பந்துவீச்சு 
ஜஸ்பிரீத் பும்ரா     4/14 
டிரென்ட் போல்ட்      2/9
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com