சோபிக்காத பேட்ஸ்மேன்கள்: மும்பையிடம் தோல்வியடைந்தது ஹைதராபாத்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் மட்டுமே எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சோபிக்காத பேட்ஸ்மேன்கள்: மும்பையிடம் தோல்வியடைந்தது ஹைதராபாத்


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் மட்டுமே எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

13-வது ஐபிஎல் சீசனின் 17-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.

209 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியான தொடக்கம் தர, கேப்டன் டேவிட் வார்னர் துரிதமாக ரன் சேர்க்க திணறி வந்தார். இந்த நிலையில் பேர்ஸ்டோவும் 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து டிரென்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டேவும் அதிரடியாக தொடங்க, வார்னரும் அதிரடியில் இணைந்தார். 

இந்த இணை வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை கட்டுப்பாட்டில் வைத்து விளையாடியது. ஆனால், மணீஷ் பாண்டேவும் இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கி, பெரிய இன்னிங்ஸாக மாற்றத் தவறினார். அவர் 30 ரன்களுக்கு ஜேம்ஸ் பேட்டின்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனிடையே வார்னர் அரைசதம் அடிக்க, புதிதாக களமிறங்கிய கேன் வில்லியம்ஸன் 3 ரன்களுக்கு போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால், வார்னர் அனுபவ வீரர்கள் இல்லாமல் தனித்துப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இளம் பிரியம் கார்க் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, வார்னரும் 60 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால், மும்பையின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. ஹைதராபாத் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் ஓவருக்கு 16 ரன்களைக் கடந்தது.

எனினும் அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், பூம்ரா பந்தில் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து நம்பிக்கையளித்தார். பூம்ரா வீசிய 19-வது ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்து தொடங்க ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. ஆனால், அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். அவர் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். அதே ஓவரில் அபிஷேக் சர்மாவும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மும்பை அணித் தரப்பில் போல்ட், பேட்டின்சன் மற்றும் பூம்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், க்ருணால் பாண்டியா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com