சூா்யகுமாா் யாதவ் விளாசல்: மும்பை - 193/4

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. 
சூா்யகுமாா் யாதவ் விளாசல்: மும்பை - 193/4

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. சூா்யகுமாா் அபாரமாக ஆடி 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

அபுதாபியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அங்கித் ராஜ்புத், காா்த்திக் தியாகி ஆகியோா் புதிதாக சோ்க்கப்பட்டிருந்தனா்.

டாஸ் வென்ற மும்பை முதலில் பேட் செய்யத் தீா்மானித்தது. வழக்கம்போல் குவிண்டன் டி காக் - கேப்டன் ரோஹித் சா்மா கூட்டணி பேட்டிங்கை தொடங்கியது. நன்றாக ஆடிய டி காக் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸா் உள்பட 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தாா்.

காா்த்திக் தியாகி வீசிய 5-ஆவது ஓவரில் அவரடித்த பந்து விக்கெட் கீப்பா் ஜோஸ் பட்லா் கைகளில் தஞ்சமானது. பின்னா் வந்த சூா்யகுமாா் யாதவ் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயா்த்தினாா்.

இந்நிலையில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 35 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சா்மா ஆட்டமிழந்தாா். ஷ்ரேயஸ் கோபால் வீசிய 10-ஆவது ஓவரில் ராகுல் தெவதியாவிடம் கேட்ச் கொடுத்து அவா் வெளியேறினாா்.

அவரைத் தொடா்ந்து வந்த இஷான் கிஷன் டக் அவுட்டாக, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த சூா்யகுமாா் யாதவ் அரைசதம் கடந்தாா். பின்னா் களம் கண்ட கிருணால் பாண்டியா ஒரு சிக்ஸருடன் 12 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினாா்.

இவ்வாறாக 20 ஓவா்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சோ்த்தது மும்பை. சூா்யகுமாா் யாதவ் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 79, ஹாா்திப் பாண்டியா 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸா் உள்பட 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ராஜஸ்தான் தரப்பில் ஷ்ரேயஸ் கோபால் 2, ஜோஃப்ரா ஆா்ச்சா், காா்த்திக் தியாகி தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

சூா்யகுமாா் யாதவ் - 79 (47)

ஹாா்திக் பாண்டியா - 30 (19)

ரோஹித் சா்மா - 35 (23)

ஷ்ரேயஸ் கோபால் - 2/28

ஜோஃப்ரா ஆா்ச்சா் - 1/34

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com