இம்ரான் தாஹிர் விரைவில் விளையாடுவார்: சிஎஸ்கே காசி விஸ்வநாதன்

நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்யமுடியும்...
இம்ரான் தாஹிர் விரைவில் விளையாடுவார்: சிஎஸ்கே காசி விஸ்வநாதன்

சிஎஸ்கே அணியைச் சேர்ந்த இம்ரான் தாஹிர் இந்த வருட ஐபிஎல் போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 17 ஆட்டங்களில் விளையாடி 26 விக்கெட்டுகளை எடுத்தார் சிஸ்கே சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர். இதன்மூலம் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். எனினும் இந்த வருடம் சிஎஸ்கே அணி 8 ஆட்டங்களில் விளையாடியபோதும் இம்ரான் தாஹிரால் ஓர் ஆட்டத்திலும் விளையாட முடியவில்லை. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:

சிஎஸ்கே அணி போட்டியில் தொடர்ந்து விளையாடுகிறபோது இம்ரான் தாஹிர் நிச்சயம் இடம்பெறுவார். தற்போதைய சூழலில் இரு பேட்ஸ்மேன்கள், இரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்து வருகிறோம். இரண்டாம் பகுதியில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக மாறும்போது இம்ரான் தாஹிர் விளையாடுவார். நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்யமுடியும். எனவே சூழலுக்கு ஏற்றாற்போல அணியைத் தேர்வு செய்து வருகிறோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com